Oats Idli - Oats Dosa : உணவுப் பழக்கம், வாழ்வியல் மாற்றங்கள் உள்ளிட்டவைகளின் காரணமாக உடல் எடை அதிகரித்திருந்தால், குறைக்க வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் அதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். அதுவு உணவுக் கட்டுப்பாடுகள் சிலவற்றை பின்பற்றுவது மிகவும் அவசியம். எண்ணெயில் பொரித்த உணவுகளை தவிர்த்து, நீராவியில் வேகவைத்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். 


நடைப்பயிற்சி:


தொலைபேசியில் பேசும்போது நடப்பது, உங்கள் அலுவலகப் படிக்கட்டுகளில் ஏறுவது, உங்கள் நாயுடன் வாக்கிங் செல்வது,  வாகனம் ஓட்டுவதற்குப் பதிலாக மிக அருகில் இருக்கும் இடங்களுக்கு நடந்து செல்வது போன்ற சின்ன சின்ன செயல்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வழிநடத்தவும் எடையைக் குறைக்கவும் உதவும். இது உங்கள் உடலில் இருக்கும் கலோரிகள் எரிவதற்கு உதவியாக இருக்கும்.


வளர்சிதை மாற்றம் மேம்படும்:


உடலின் தசை வளர்ச்சிக்கு உதவுவதோடு வளர்சிதை மாற்றத்திற்கும் இது நல்லது . நடைப்பயிற்சி எவ்வளவு நல்லதோ அதே அளவு படிக்கட்டுகளில் ஏறி உடற்பயிற்சி செய்வது நல்லது. 


காலை எழுந்ததும் தண்ணீர்


காலையில் எழுந்ததும் எலுமிச்சை சாறு சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறந்த வழியாகும்.  இரவு உணவிற்கு பிறகு,நீண்ட நேரம் உணவு எடுத்துக்கொள்ள மாட்டோம், இல்லையா? அப்படியிருக்கையில், காலையில் ஒரு க்ளாஸ் தண்ணீர் நச்சுத்தன்மையை வெளியேற்றுவதற்கும்  செரிமானத்திற்கும் உதவுகிறது. இது கொழுப்பை கரைப்பதை துரிதப்படுத்துகிறது.


இவற்றோடு உணவுப் பழங்களில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். குடலுக்கு ஆரோக்கியம் இல்லாத உணவுகளைத் தவிர்க்க வேண்டும். பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுகளுக்கு நோ சொல்ல வேண்டும். காலை உணவில் அதிகளவு சர்க்கரை, இனிப்பு இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். ரவா, ஓட்ஸ் வைத்து இட்லி செய்வது எப்படி என்று காணலாம்.


ஓட்ஸ் இட்லி


என்னென்ன தேவை?


ஓட்ஸ் - ஒரு கப்


ரவை - அரை கப்


புளித்த தயிர் - ஒரு கப்


உப்பு - தேவையான அளவு


நறுக்கிய பச்சை குடைமிளகாய் - அரை கப்


நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்


தாளிக்க:


எண்ணெய் - தேவையான அளவு


கடுகு - ஒரு டீஸ்பூன்


கருவேப்பிலை - சிறிதளவு


செய்முறை:


மிக்ஸியில் ஓட்ஸை நன்றாக பவுராக்கவும். இத்துடன் வறுத்த ரவையை சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும். நறுக்கிய குடைமிளகாய், தயிர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். இப்போது தாளிக்க வேண்டும். அடுப்பில் கடாயில், எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும், கடுகு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து இந்தக் கலவையில் சேர்க்க வேண்டும். இட்லி மாவு தயார். காரத்திற்கு தேவையெனில், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி சேர்க்கலாம். இந்த மாவை 10 நிமிடங்கள் ஊறவைக்கவும்.


இப்போது இட்லி தயாரிக்கலாம். இட்லித் தட்டுகளில் மாவை ஊற்றி 10-12 நிமிடங்கள் வேக வைத்தால் ஓட்ஸ் -ரவை இட்லி தயார். இதை தேங்காய் அல்லது கொத்தமல்லி இலை சட்னியுடன் ருசித்து சாப்பிடலாம்.


கொத்தமல்லி சட்னி


உளுந்து, பச்சை மிளகாய், சிறிதளவு சீரம், ஒரி கைப்பிடி அளவு கொத்தமல்லி எல்லாவற்றையும் நன்றாக வதக்க வேண்டும். அது ஆறியதும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் கொத்தமல்லி சட்னி தயார். மிக்ஸியில் வெகு நேரம் அரைக்க கூடாது. அப்படி செய்தால் சட்னியில் கசப்புத்தன்மை ஏற்படும்,.