க்ரீமியான பாஸ்தா சாப்பிட வேண்டும்; ஆனால், அதில் சீஸ் அதிகம் இருகேன். ஹெல்தியா இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்பவர்களுக்கு இந்த ரெசிபி! பாஸ்தாவில் கொஞ்சம் கீரை சேர்த்து கொள்ளலாம். பாலக்கீரை என்றால் சுவையாக இருக்கும். பென்னே, மேக்ரோனி, Fettuccin, ஸ்பிரிங் பாஸ்தா உள்ளிட்ட பல வகைகளில் பாஸ்தா கிடைக்கின்றன. இத்தாலி ஸ்டைல், இந்தியன் ஸ்டைல் என பல முறைகளில் செய்யலாம். குறுகிய நேரத்திலும் சுவையான ஸ்வீன்கார்ன் ஸ்பினாச் பாஸ்தா செய்து விடலாம். 


பாஸ்தாவை வேக வைக்க டிப்ஸ்:


பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, வேக வைக்கும்போது, தண்ணீர் நன்றாக கொதித்ததும் அதில் பாஸ்தாவை போட வேண்டும். கூடவே தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு எண்ணெய் சேர்ப்பது பரிந்துரைக்கப்படுகிறது. பாஸ்தாவை 7 நிமிடங்களுக்கு மேல் வேக வைக்கக் கூடாது. அப்படி செய்தால் குழைந்துவிடும்; ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளும். அதனாலேயே தண்ணீர் நன்றாக கொதிநிலை வந்ததும் பாஸ்தாவை சேர்க்க வேண்டும். 


7 அல்லது அதிகபட்சமாக 8 நிமிடங்களில் பாஸ்தாவை அடுப்பிலிருந்து இறக்கி வடிகட்டி வேண்டும். பின்னர் அதை ஒரு நீள ட்ரேயில் கொட்டி அதன் மீது ஒன்றிரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கிளறி பரப்பிவிடவும். இது பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளும். எல்லா வகையான பாஸ்தாவையும் இப்படி வேக வைக்கலாம்.


பாஸ்தா செய்யும்போது வொயிட் சாஸ், ரெட் சாஸ் வீட்டிலேயே தயாரிக்கலாம். பாஸ்தா செய்வதற்கு முன்னதாகவே இதை தயாரிக்கலாம். சாஸ் தனியாக, பாஸ்தா தனியாக வேக வைப்பது இல்லாமல் ஒரே பாத்திரத்திலும் செய்யலாம்.


ஸ்வீட்கார்ன் ஸ்பினாச் பாஸ்தா


என்னென்ன தேவை?


பாஸ்தா (பென்னே, ஸ்பிரிங் உங்கள் விருப்பத்திற்கேற்ப) - ஒரு கப்


ஸ்வீட்கார்ன் - 1 1/2 கப்


பாலக்கீரை விழுது - ஒரு கப்


சிவப்பு, மஞ்சள், பச்சை குடை மிளகாய் - தலா ஒன்று


க்ரீம் - அரை கப்


பூண்டு - 2 பல்


துருவிய சீஸ் - ஒரு கப்


பால் - ஒரு கப்


உப்பு -தேவையான அளவு


ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன் (தேவையான அளவு)


செய்முறை:



  • பாஸ்தாவில் சேர்க்க வேண்டிய மூன்று வண்ண குடைமிளகாய், பூண்டு, ஸ்வீட்கார்ன் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.

  • பாலக்கீரையை நன்றாக வதக்கி மிக்ஸியில் அரைத்து எடுக்க வேண்டும். 1 நிமிடங்களுக்குள் அரைத்தால் மட்டுமே போதும். அதிக நேரம் கீரையை அரைக்க கூடாது.

  • ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் வெண்ணெய் சேர்த்து அதில் பூண்டு சேர்த்து வதக்கவும்.

  • பின், அதில் பாஸ்தா, நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகள் ஆகியவற்றை கலந்து 1 நிமிடம் வதக்கவும்.

  • இதில் பால், கொஞ்சம் க்ரீம், சீஸ் உள்ளிட்டவற்றை சேர்க்கவும். தேவையெனில் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம். பாஸ்தாவிற்கு தேவையானவற்றை கலந்து மூடி வைத்து 10 நிமிடங்கள் நன்றாக வேக வைக்க வேண்டும்.

  • 10 -15  நிமிடங்களுக்குள் வெந்துவிட்டும். பாஸ்தா, காய்கறிகள் வெந்ததும்,  அதில் ஓரிகானோ, சில்லி ஃப்ளேக்ஸ், அரைத்த கீரை விழுது, சீஸ், கொஞ்சம் க்ரீம் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கவும். அவ்வளவுதான். கூடான பாஸ்தா தயார்.

  • இதை பாஸ்தாவை தனியாக வேக வைத்தும் செய்யலாம். ஒயிட்சாஸ் இதோடு சேர்ப்பது சுவையாக இருக்கும்.