Beetroot Dosa: தோசை பிரியர்களுக்கு பிடித்தமான பீட்ரூட் தோசை,  உடுப்பி தக்காளி தோசை எப்படி செய்வது என காணலாம். பனீர், பாலக்கீரை, தக்காளி, பீட்ரூட், மரவள்ளிக் கிழங்கு, முருங்கைக்கீரை, முடைக்கத்தான் கீரை  என ஆரோக்கியத்துடன் ருசியான ஊத்தாப்பம்,தோசை செய்யலாம். காலை உணவாகவும் சாப்பிடலாம். இல்லையெனில், மலை நேரத்தில் குழந்தைகள் பள்ளி முடிந்து வந்ததும் செய்து கொடுக்கலாம்.


பீட்ரூட் தோசை:


என்னென்ன தேவை?


இட்லி பச்சரிசி - ஒரு கப்


பீட்ரூட் - 3 


உருளுந்து - 2 டேபிள் ஸ்பூன்


சிகப்பு மிளகாய் - 2 (தேவையான அளவு)


வெந்தயம் - 2 டேபிள் ஸ்பூன்


சீரகம் - ஒரு டீஸ்பூன்


இஞ்சி - சிறிய துண்டு


கொத்தமல்லி - சிறிதளவு


கருவேப்பிலை - சிறிதளவு


உப்பு - தேவையான அளவு


செய்முறை:


இட்லி அரிசி ஒரு கப், உளுந்து, 2 டேபிள் ஸ்பூன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊர வைக்கவும். கொத்தமல்லி, கருவேப்பிலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். மிக்ஸி ஜாரில் அரிசி, உளுநது பருப்பு, சிகப்பு மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக தோசை மாவு போன்று அரைக்கவும். பீட்ரூட் தோல் நீக்கி, சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு இரண்டையும் நைஸாக அரைத்து அரிசி மாவுடன் சேர்க்கவும். நன்றாக கலந்து கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்க்கவும். அவ்வளவுதான். மாவு தயார். 


இட்லி மாவு இருந்தாலே போதும். பீட்ரூட் விழுது அரைத்து எப்போது வேண்டுமாலும் பீட்ரூட் தோசை செய்துவிடலாம். கிரைண்டரில் மாவு அரைப்பது தோசை நன்றாக வர உதவும்.


அடுப்பில் தோசை கல்லை மிதமான தீயில் வைக்கவும். அதில், நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தோசை ஊற்றவும். இரண்டு புறமும் பொன்னிறமாகியதும் தோசை ரெடி. இதை  தேங்காய் சட்னி, கார சட்னி  உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். 


உடுப்பி தக்காளி தோசை 


என்னென்ன தேவை?


இட்லி பச்சரிசி - ஒரு கப்


தக்காளி - 3 


கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்


சிகப்பு மிளகாய் - 2 (தேவையான அளவு)


சீரகம் - ஒரு டீஸ்பூன்


இஞ்சி - சிறிய துண்டு


கொத்தமல்லி - சிறிதளவு


கருவேப்பிலை - சிறிதளவு


உப்பு - தேவையான அளவு


செய்முறை:


இட்லி அரிசி ஒரு கப், கடலை பருப்பு 2 டேபிள் ஸ்பூன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் வரை ஊர வைக்கவும். கொத்தமல்லி, கருவேப்பிலை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். கிரைண்டரில் அரிசி, கடலை பருப்பு, சிகப்பு மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக தோசை மாவு போன்று அரைக்கவும். தக்காளி, உப்பு இரண்டையும் நைஸாக அரைத்து அரிசி மாவுடன் சேர்க்கவும். நன்றாக கலந்து கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்க்கவும். அவ்வளவுதான். மாவு தயார். 


அடுப்பில் தோசை கல்லை மிதமான தீயில் வைக்கவும். அதில், நெய் அல்லது எண்ணெய் சேர்த்து தோசை ஊற்றவும். இரண்டு புறமும் பொன்னிறமாகியதும் தோசை ரெடி. இதை  தேங்காய் சட்னி, கார சட்னி  உடன் சாப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும். இதை செய்முறையில் கேரட் தோசை, கீரை தோசை உள்ளிட்டவற்றை செய்து அசத்தலாம்.