தயிர் கைக்குழந்தை முதல் 100 வயது முதியவர் வரை எல்லோருக்கும் உகந்த உணவு. ஒவ்வாமை இருப்போர் விதிவிலக்கு. தயிர் என்பது லேக்டோபேசிலஸ் பாக்டீரியாவால் நொதிக்கப்பட்டு லேக்டிக் அமிலம் லேக்டோஸாக மாற்றப்படுகிறது.


இது ஜீரணத்தை தூண்டுகிறது. இதில் கலோரி குறைவு. அதேவேளையில் புரதச் சத்து நிறைவாக இருக்கிறது.  28 கிராம் தயிரில் 12 கிராம் புரதம் இருக்கிறது. தயிர் செல்களில் நீர்ச்சத்தை பாதுகாக்கிறது. அதனால் சிறுநீரக செயல்பாடு சீராகிறது. ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் தங்கள் டயட்டில் நிச்சயமாக தயிரை சேர்த்துக் கொள்ளலாம். 


தயிரை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். இரவு நேரத்தில் தயிரை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஆனால் முடியாத பட்சத்தில், தயிருடன் சர்க்கரை அல்லது சிறிது மிளகுத் தூள் சேர்த்து சாப்பிடலாம். இதனால் செரிமானம் மேம்படும்.


தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக்கூடாது. அதேப் போல் தயிருடன் சீஸ் சேர்த்தும் சாப்பிடக்கூடாது.
 
தயிருடன் நட்ஸ் சேர்த்து சாப்பிடவே கூடாது. ஏனெனில் இவை இரண்டிலுமே புரோட்டீன் அதிகம் இருப்பதால், அது செரிமான மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தைக் கொடுக்கும்.
 
அதே சமயத்தில் அசைவ உணவுகளான சிக்கன், மட்டன், மீன், காடை, கவுதாரி என எந்தவொரு அசைவ உணவுடனும் தயிரை சாப்பிடகூடாது. அதிலும் மிக முக்கியமாக மீனையும் தயிரையும் ஒன்றாக சாப்பிட்டால் தோல் வியாதி ஏற்படும்.


எடை குறைப்பும் தயிரும்:


இன்று பலருக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது உடல் பருமன். அதிக எடை காரணமாக இளம் வயதினர் கூட பல்வேறு நோய்களுக்கு ஆளாவது அதிகரித்து வருகிறது. எடை குறைப்பிற்காக பல்வேறு டயட் முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதனிடையே பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ள தயிர், எடை இழப்பை ஊக்குவிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. புரதச்சத்து நிறைந்த உணவுகள் உடலில் இருக்கும் தேவையற்ற எடையை இழக்க மிகவும் உதவும். தயிரில் புரதம் நிறைவாக உள்ளது. கால்சியம், வைட்டமின் பி -2, வைட்டமின் பி -12, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. தயிர், ரத்த அழுத்தத்தை குறைக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, நோயை உருவாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட என பல வகைகளிலும் நமக்கு நன்மைகளை அளிக்கிறது.


வீட்டிலேயே க்ரீமியான தயார் செய்வதற்கான டிப்ஸ்கள்


வீட்டில் தயிர் தயாரிக்க முதலில் கெட்டியான பால் அவசியம். அப்பொழுது தான் தயிர் நமக்கு க்ரீமியாக மாற்ற உதவும்.


நமக்கு தயிர் நன்றாக வர வேண்டும் என்றால் அதற்கு சரியான பாத்திரம் தேர்வு செய்வது அவசியமான ஒன்று. முக்கியமாக வீட்டில் மண் பானை இருந்தால், அதனுள் தயிர் சேமித்து வைக்கலாம். முன்னதாக தயிர் செய்ய பாலை நன்கு சூடாக்க வேண்டும். நல்ல கொதித்து நுரை வந்ததும் பாலை ஆற வைத்து தயிர் சேமிக்கும் பாத்திரத்தில் பாலை ஊற்றி வைக்க வேண்டும்.


இதற்கு முக்கியமாக பருவகாலத்திற்கு ஏற்ப பாலின் வெப்பநிலையை வைத்திருக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் கோடைக்காலத்தில் தயிர் தயாரிக்கிறீர்கள் என்றால்? பால் சற்று சூடாக இருக்க வேண்டும்.  இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் பாத்திரத்தை நகர்த்தாமல் சுமார் 6-7 மணி நேரம் அப்படியே விட்டுவிட வேண்டும். ஏனென்றால் கோடைக்காலத்தில் தயிர் செட் ஆக சுமார் 6-7 மணி நேரம் ஆகும்.