வீட்டில் நாம் சுவையாகவே குருமா செய்தாலும், ஹோட்டலில் சாப்பிடும் குருமாவின் சுவை சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஆனால் ஹோட்டல் ஸ்டைலில் ஒரு சுவையான குருமாவை நாம் வீட்டிலேயே எளிமையாக செய்து விட முடியும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


1/3 கப் தேங்காய், கசகசா 1 டீஸ்பூன், பெருஞ்சீரகம் 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் 1, ஊறவைத்த முந்திரி,எண்ணெய் 3 டீஸ்பூன், வளைகுடா இலை, இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர பூ, பெருஞ்சீரகம் 1/4 தேக்கரண்டி, வெங்காயம் 1, இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன், 1 தக்காளி, 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், 1 தேக்கரண்டி தனியா தூள், 3/4 தேக்கரண்டி கரம் மசாலா, உப்பு 1 டீஸ்பூன், உருளைக்கிழக்கு, கேரட் உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான காய்கறிகள்.


செய்முறை


ஹோட்டல் ஸ்டைலில் செய்யப்படும் இந்த குருமா மிகவும் சுவையானது மற்றும் செய்ய எளிதானதும் கூட. இதை பரோட்டா, சப்பாத்தி, இடியாப்பம், இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். 


மிச்சி ஜாரில் 1/3 கப் தேங்காய், முந்திரி 10, கசகசா 1 டீஸ்பூன், பெருஞ்சீரகம் 1 டீஸ்பூன், பச்சை மிளகாய் 1, ஊறவைத்த முந்திரி சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.


இப்போது ஒரு கடாயில் அல்லது குக்கரில் 3 டீஸ்பூன் எண்ணெய், வளைகுடா இலை, இலவங்கப்பட்டை, கிராம்பு, நட்சத்திர பூ, பெருஞ்சீரகம் 1/4 தேக்கரண்டி சேர்க்கவும்.


வெங்காயம் 1 , இஞ்சி பூண்டு விழுது 1 டீஸ்பூன் சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் 1 தக்காளி சேர்த்து நன்கு குழையும் வரை வதக்க வேண்டும். 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், 1 தேக்கரண்டி தனியா தூள், 3/4 தேக்கரண்டி கரம் மசாலா சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். இதனுடன் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.


இதனுடன் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். காலிஃபிளவர், கேரட், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, பீன்ஸ் எல்லாவற்றையும் தலா 1/4 கப் சேர்த்து, 1.5 கப் தண்ணீர் சேர்க்க வேண்டும். 


இதனுடன் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். காய்கறிகள் நன்கு வெந்து எண்ணெய் பிரிந்து வர வேண்டும்.  இதற்கு  2 விசில் வரும் வரை குக்கரை மூடி வைக்க வேண்டும். (தேவைப்பட்டால் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். ) இதன் மீது புதினா கொத்தமல்லி இலைகளைச் சேர்த்து உங்களுக்குப் இட்லி, தோசை, சப்பாத்தி உள்ளிட்டவற்றுடன் இந்த குருமாவை பரிமாறலாம். 


மேலும் படிக்க


குலசேகரன்பட்டினத்திற்கு வரும் பிரதமர் மோடி - அனைவருக்கும் காத்திருக்கும் சர்ப்ரைஸ் - எக்ஸ்குளூசீவ் செய்தி


வாக்காளர் பட்டியலில் மீண்டும் இறந்தவர்களின் பெயர்கள் - கரூர் ஆட்சியரிடம் புகாரளித்த எம். ஆர். விஜயபாஸ்கர்