கொழுப்பு அவசியமானது அதிகமானால் ஆபத்தானது:
கொழுப்பை முழுக்க முழுக்க புறக்கணித்துவிடவும் முடியாது. ஏனெனில் உடலில் ஹார்மோன்கள், மெம்பரன்ஸ் மற்றும் வைட்டமின் டி தக்கவைத்தல் உள்ளிட்ட பலவற்றிற்கு கொழுப்பு மிகவும் அவசியமானது. கொழுப்பு நீரில் கரையக்கூடியது அல்ல. அதனால், Lipoproteins இரத்தம் வழியே நீந்தி உடலின் மற்ற உள்ளுருப்புகளுக்கு செல்ல பயன்படுகிறது. இதில் இரண்டு வகை இருக்கிறது. அவை LDL (Low-density Lipoproteins) மற்றும் HDL (high-density Lipoproteins)
குறைந்த அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (Low-density Lipoproteins) - இவைதான் கெட்ட கொழுப்பு. குறைந்த அளவிலான Lipoproteins இதயத்தின் அறைகளான ஆர்டெரிகளில் அடைத்து இதயநோய்க்கு வழிவகுக்கும்.
அதிக அடர்த்தி கொண்ட லிப்போ புரோட்டின்கள் (high-density Lipoproteins)- என்பது இதயத்தில் கொழுப்பு அடைத்துக் கொள்ளாமல் பாதுகாக்கும் பணியை செய்பவை. அப்படி, உடலில் கெட்ட கொழுப்பு சேர்ந்தாலும், அதை கல்லீரலில் இருந்து நீக்க உதவி புரிகிறது.
கொழுப்பு அதிகரிப்பதன் அறிகுறிகள்:
நம் உடலில் கொழுப்பு அதிகரிப்பதற்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் சில இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் கண்களின் மேல் தோன்று சிறு தடிப்புகளும் பார்வையில் ஏற்படும் மாற்றங்களும். பார்வை குறைகிறது என்றால் அது முழுக்க முழுக்க கருவிழி சார்ந்தது என்று நினைத்துவிட வேண்டாம்.
சில நேரம் அது கொழுப்பால் கூட இருக்கலாம். கார்னியாவைச் சுற்றி சாம்பல், வெள்ளை, மஞ்சள் நிற படிமங்கள் காணப்படலாம். கண்ணின் மேல்புறத்தில் மஞ்சள் நிறத்தில் சிறு தடிப்புகள் உருவாகலாம். இவை தெரிந்தால் நிச்சயமாக கொழுப்பின் ஆரம்ப அறிகுறி ஆகும்.
உடலில் கொழுப்பு கூடியிருப்பதை மருத்துவப் பரிசோதனை மூலம் அறிந்து கொண்டால் மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள், உடற்பயிற்சிகளை மேற்கொள்வதோடு இந்த உணவுகளையும் பழக்கப்படுத்திக் கொள்ளலாம்.
1. சிவப்பு அரிசி சாதமும், பருப்பும்:
இந்திய உணவில் பருப்பு அத்தியாவசியமான உணவு. அதில் புரதச்சத்தும், நீர்ச்சத்தும் இருக்கின்றது. LDL cholesterol (low-density lipoprotein), இது எல்டில் கொலஸ்ட்ரால் எனப்படும் கெட்ட கொழுப்பை கரைக்க உதவுகிறது. சிவப்பு அரிசியில் உள்ள சத்துகள் இதய நோய்களை 20 சதவீதம் வரை குறைக்கும் தன்மை கொண்டது.
2. பார்லி, ஓட்ஸ் மற்றும் முழு தானியங்கள்:
கொழுப்பு அதிகமாக உள்ளவர்கள் ஓட்ஸ், ஓட்ஸ் உமி, பார்லி மற்றும்பிற முழு தானியங்களை சாப்பிடலாம். காலை உணவில் ஓட்ஸ் சேர்த்துக் கொள்வது கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும்.
3. பாதாம் மற்றும் தயிர்:
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த பாதாம் மிகுந்த உதவியாக இருக்கும். அதில் உள்ள மோனோசேச்சுரேடட் ஃபேட்ஸ் மற்றும் புரதம் கொழுப்பைக் கட்டுப்படுத்தும். எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவு வெகுவாகக் குறையும். அதேபோல் யோக்ஹர்ட் கொலஸ்ட்ரல் அளவை 4 சதவீதம் வரை கட்டுப்படுத்தும். ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
4. பேட்டி ஃபிஷ்:
மத்தி, காட் மீன்கள் மற்றும் சால்மன், மேக்கரல் போன்ற மீன்கள் சேச்சுரேடட் ஃபேட்ஸ் கொண்ட மற்ற புரதங்களுக்கு மாற்றாக பயன்படுத்தலாம். இவற்றில் அன்சேசுரேடட் ஃபேட்ஸ் உள்ளன. omega-3 ஃபேட்டி அமிலம் உள்ளது. இதனால் திடீர் மாரடைப்பு, பக்கவாதம் ஆகியன தவிர்க்கப்படலாம்.
5. கத்தரிக்காய், வெண்டைக்காய், பீன்ஸ்:
கத்தரிக்காய், வெண்டைக்காய் மற்றும் பீன்ஸ் வகைகள் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் உதவக்கூடியவை. கிட்னி பீன்ஸ், லெண்டில்ஸ், கார்பான்ஸோஸ், ப்ளாக் ஐட் பீஸ் என எல்லா வகையான பீன்ஸும் கொலஸ்ட்ரா கட்டுப்பாட்டில் உதவும்.
கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவையும் குறைக்க உதவுகிறது. குறிப்பாக இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர் சத்துக்களால் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது.
வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும். வெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.