தீபாவளித் திருநாளில் அன்பைப் பகிர ஒன்றாக அமர்ந்து உண்ணுகிறோம், பரிசுகளைப் பரிமாறிக்கொள்கிறோம்,வீட்டில் அவரவர் பிள்ளைகளுடன் அளவளாவுகிறோம். தீபாவளிக்கு நண்பர்கள் வீட்டுக்கும் உறவினர்கள் வீட்டுக்கும் செல்லும்போது அவர்கள் தரும் இனிப்புகளைச் சாப்பிடுவது தவிர்க்க முடியாததாகிறது. இவை அனைத்தையும் சாப்பிடுவதால், ஒரு கட்டத்தில் நமது வயிறு வீங்கியதாகவும், அசௌகரியமாகவும் உணர்கிறோம். இதன் விளைவாக, அடுத்த நாள் காலையில் வயிற்றுக்கு இலகுவான உணவினைத் தேர்வு செய்கிறோம். ஆனால் இதுபோன்று அதிகமாக உண்ணும் சமயங்களில் முன்கூட்டியே அவற்றுக்கான எளிய இலகுவான உணவுகளைத் தேர்வு செய்வது முக்கியம். இதனை உண்பதால் எடை கூடுதலைத் தடுத்தல், அதிகமாகச் சாப்பிடுவதைச் சரி செய்தல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தலாம். அந்த வகையில் உடலின் டாக்ஸிசிட்டியை நீக்கும் சில எளிய உணவுகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம். உங்களுக்கான அந்தப் பட்டியல் கீழ் வருமாறு....


1. பெசன் கா சீலா - எல்லோருடைய ஃபேவரிட்டான வெஜ் ஆம்லெட் எனப்படும் இந்த பெசன் கா ச்சீலாவுடன் எங்கள் பரிந்துரை தொடங்குகிறது. புரதம் நிறைந்த சீலா ரெசிபியை இதோ உங்களுக்காகப் பரிந்துரைக்கிறோம், இது உங்கள் மெட்டபாலிசத்தைத் தூண்டி, நாளின் முதல் பாதியில் உங்கள் உடலை இலகுவாக்கும் மேலும் உடலின் சோம்பலைத் தவிர்க்கும்.


2. வதக்கிய ப்ரோக்கோலி மற்றும் பாதாம் டிடாக்ஸ் சாலட்:


 ப்ரோக்கோலி மிகவும் பயனுள்ள டிடாக்ஸ் உணவுகளில் ஒன்றாகும். இந்த சாலட் உணவில் பாதாம் பருப்புடன் வதக்கிய ப்ரோக்கோலி சேர்க்கப்படுகிறது. பாதாம் பருப்புகளில் டிரிப்டோபான் உள்ளது, இது மூளையின் செயல்பாடு மற்றும் நினைவுத்திறனை மேம்படுத்துகிறது.




3. காலை உணவுக்கான டிடாக்ஸ் சீரல்: 
மியூஸ்லி, வாழைப்பழம், தேன், தயிர் மற்றும் சூரியகாந்தி விதைகள் ஆகியவற்றை ஒரு பெரிய பவுலில் நிரப்பிக் கொள்ளுங்கள். தயிருக்கு பதிலாக பால் சேர்த்துக்கொள்ளலாம். அல்லது லேக்டோஸ் அலர்ஜி இருப்பவர்கள் வெதுவெதுப்பான நீரை சேர்த்துக்கொள்ளலாம். இந்த எளிய ஒருநிமிட உணவு ஒரு சிறந்த டிடாக்ஸ்.


4. முளைகட்டிய பயறு


 ஒரு கிண்ணத்தில் துருவிய கேரட், மெல்ல வதக்கிய ப்ரோக்கோலி, கொஞ்சம் வேகவைத்த வெண்டைக்காய் முளைகட்டிய பயறு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கவும். இந்த கலவை ஒரு சிறந்த நச்சு நீக்கும் உணவாக அமைகிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலுக்குத் தேவையற்றவற்றை அகற்றவும், இரத்த நாளங்களை சுத்தப்படுத்தவும், குடல் இயக்கத்தை மேம்படுத்தவும் ஒரே நேரத்தில் உதவுகின்றன.


5. டிடாக்ஸ் க்ரீன் ஸ்மூத்தி


நீங்கள் எடை குறைக்க டயட்டில் இருந்தால், கீரையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்வது உங்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும். கீரை நார்ச்சத்தின் ஒரு சிறந்த மூலமாகும், இது ஜீரணிக்க சிறிது நேரம் எடுக்கும்; அதனால் எளிதில் பசி ஏற்படாது. இதன் காரணமாக நீங்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டிய தேவையை உணரமாட்டீர்கள்.