அவகேடோ என்னு அழைக்கப்படும் பட்டர் ஃபுரூட் பற்றி வெகு சிலரே அறிவர். ஏனெனில் பெரும்பாலானோர் இந்த பழத்தை வாங்கி சாப்பிடுவதில்லை. ஆனால் இந்த பழத்தில் உடலின் ஆரோக்கியத்திற்கு  தேவையான வைட்டமின்கள், மெக்னீசியம், தாதுக்கள், பொட்டாசியம், ஒமேகா - 3 இரும்புச்சத்து மற்றும் நல்ல கொழுப்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளன. மேலும் இந்த பழத்தில் பல சிறப்பு பண்புகள் உள்ளதாக என்று மருத்துவ ஆய்வுகளும் கண்டறிந்துள்ளன.





ஒவ்வொரு பழத்திற்கும் தனித்தனி சிறப்புக்கள் உள்ளன. பெரும்பாலும் அவை பல நன்மைகளை வழங்கினாலும் சில பக்க விளைவுகள் இருக்க தான் செய்கின்றன. அது போல அவகேடோ பழத்திலும் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. மனச்சோர்வு, தூக்கமின்மை, பக்கவாதம், பசியின்மை போன்ற பாதிப்புகளில் இருந்து காக்கின்றன. கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடுவதன் மூலம் பிறக்க போகும் குழந்தைகளின் ஆரோக்கியம் மேம்படும். எலும்புகள் வலுவடைய தேவையான வைட்டமின்கள் இந்த பழத்தில் நிறைந்துள்ளன. குடல் இயக்கங்களுக்கு தேவையான நார்ச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளதால் உணவு செரிமானத்திற்கு அதிகம் உதவுகின்றன. புற்றுநோயை தடுக்க தேவையான ஆன்டிஆக்சிடென்ட்டுகளை வழங்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடலின் நரம்பு மண்டலங்களை வலுவடைய செய்கிறது. வயதானவர்கள் பலர் கண் புரையால் பாதிக்கப்படுவர். அவர்கள் இந்த அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் கண் புரையை வளர விடாமல் தடுத்து பார்வை திறனை அதிகரிக்கும்.  சரும ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க அவகேடோ பழம் உதவுகிறது.






அவகேடோ பழத்தை நம் அன்றாட உணவில் சரியான டயட்டுடன்  சேர்த்து கொள்வதால்  உடலுக்கு தேவையான மோனோசாச்சுரேட்டட்  எனப்படும் நல்ல கொழுப்புகளை அதிகரிக்கும் ஆனால் இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கவோ அல்லது தொப்பையை அதிகரிக்கவோ உதவாது.  இருப்பினும் தற்போதய மருத்துவ ஆய்வின் படி அவகேடோ பழத்தை சாப்பிடுவதால் LDL கொலஸ்ட்ரால் அளவு சற்று குறைவதாக கண்டறிந்துள்ளனர். இது உடலின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானதாகும். இதனை தினசரி உணவில் சரியான டயட் உடன் எடுத்துக்கொள்வதால் ஒருவரின் உணவுமுறையின் தரத்தை உயர்த்தமுடியும். உணவு முறையின் தரம் உயர்த்தப்பட்டால் அது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.





மேலும் அவகேடோ பழத்தை தினசரி எடுத்துக்கொள்ளும் போது LDL கொலஸ்ட்ரால் அளவு  2.5 மிகி வரை குறைகிறது என்றும் உடலின் கொலஸ்ட்ரால் அளவில் 2.9 மி.கி. வரையும் குறைகிறது என்று மருத்துவ அறிக்கைகள் கண்டறிந்துள்ளன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண