ஐஸ் கிரீம் யாருக்குத்தான் பிடிக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் கால நேரம் இல்லாமல் ஐஸ் கிரீம் சாப்பிடலாம் என்றால் குஷியாகி விடுவார்கள். ஆனால் சந்தைகளில் கிடைக்கும் ஐஸ் கிரீம்கள் ஃப்ரோஷன் டெஸட், அதாவது உறைய வைக்கப்பட்ட இனிப்பு மட்டுமே. அதில் பால் அல்லது சத்துமிக்க எந்தவகையான உணவுப் பொருளும் இல்லை. ஆனால், அனைவரின் சாய்ஸ் ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த ஐஸ் கிரீம் கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆமாம், நம் குழந்தைகளுக்கு அது பாதுகாப்பானது. நமக்கு ஐஸ் க்ரீம் சாப்பிட வேண்டும் என்று தோணும்போதெல்லாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே அதை செய்யலாம். பழங்களை கொண்டு ஐஸ் கிரீம் தயாரித்தால் கூடுதலாக சுவையும் ஆரோக்கியமும் கிடைக்கும். இந்த கோடையில் வீட்டிலேயே ஐஸ் கிரீம் செய்து என்ஜாய் பண்ணுங்க.
வெண்ணிலா ஐஸ் கிரீம்
தேவையானவை:
பால் - 3 கப்,
சர்க்கரை - முக்கால் கப்,
கார்ன்ஃப்ளார் - 5 டேபிள்ஸ்பூன்,
வெனிலா எசன்ஸ் - கால் டீஸ்பூன்,
யெல்லோ + க்ரீன் கலர் - ஒரு சிட்டிகை,
க்ரீம் - ஒரு கப் (செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது), - 2 டேபிள்ஸ்பூன்.
கண்டன்ஸ்டு மில்க்- ஒரு பெரிய கப்
செய்முறை:
ஒரு கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் பாலை ஊற்றி, காய்ச்சவும். 5 நிமிடம் கழித்து கார்ன்ஃப்ளாரை சிறிதளவு தண்ணீரில் கரைத்து கொதிக்கும் பாலில் சேர்க்கவும். அந்தக் கலவை கெட்டியாகும் வரை கொதிக்கவிடவும். இதனுடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை கொதிக்கவிடவும். பின்னர், இக்கலவை கெட்டியானதும், அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவிடவும். இதனுடன் வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும். இதை பீட்டர் வைத்து நன்றாக கலக்கவும். இதனுடன் க்ரீமை சேர்த்து நன்றாக பீட் செய்யவும்.
பிறகு இந்தக் கலவையை ஃப்ரீஸரில் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து,வெளியே எடுத்து மறுபடியும் ‘பீட்’ செய்யவும். இதை ஐஸ் ட்ரேயில் கொட்டி, பிளாஸ்டிக் ஷீட்டால் நன்றாக மூடி, ஃப்ரீஸரில் வைக்கவும். ஐஸ் கிரீம் ரெடி! இதோடு தேவைப்பட்டால் பாதாம், பிஸ்தா போன்றவைகளை பவுடரக்கி கலந்தால், பாதாம் ஐஸ் கிரீம் மற்றும் பிஸ்தா ஐஸ் கிரீம் தயாராகிவிடும்.
மாம்பழ ஐஸ்கிரீம்
தேவையானவை:
பால் - ஒரு லிட்டர்,
கார்ன்ஃப்ளார் - இரண்டரை டீஸ்பூன்,
சர்க்கரை - முக்கால் கப்,
ஃப்ரெஷ் கிரீம் அல்லது கண்டன்ஸ்டு மில்க - ஒரு கப்,
மேங்கோ எசன்ஸ் - ஒரு டீஸ்பூன்,
ஆறிய பால் - கால் கப்,
மாம்பழக் கூழ் - ஒரு கப்,
பொடித்த சர்க்கரை - கால் கப்.
செய்முறை:
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
15 நிமிடம் கொதிக்கவிடவும். கார்ன்ஃப்ளாரை, ஆறிய பாலில் கரைத்து தனியே வைக்கவும். கொதிக்கும் பாலில் சர்க்கரை சேர்த்து, கார்ன்ஃப்ளார் கரைசலையும் சேர்க்கவும். இந்தக் கலவை 5 நிமிடம் கொதிக்கவிடவும் மாம்பழத் துண்டுகளை மிக்சியில் அரைத்து கூழாக்கவும். கலவை ஆறியதும், ஐஸ் ட்ரேயில் கொட்டி, பிளாஸ்டிக் ஷீட்டால் மூடி ஃப்ரீஸரில் செட்டாகும் வரை வைக்கவும். பிறகு ஃப்ரீஸரிலிருந்து எடுத்து, நன்றாக மிருதுவான கிரீமியாகும் வரை ‘பீட்’ செய்யவும். இப்போது மாம்பழக் கூழ், பொடித்த சர்க்கரை, கிரீம், எசன்ஸ் (தேவையெனில் சேர்த்துக் கொள்ளலாம்.) ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக ‘பீட்’ செயய்வும். இதை பால் கலவையில் கலந்து, ட்ரேயில் ஊற்றி பிளாஸ்டிக் ஷீட்டால் மூடி ஃப்ரீஸரில் செட் ஆகும் வரை வைக்கவும். சுவையான மாம்பழ ஐஸ் கிரீம் தயார்.
வாழைப்பழ ஐஸ் கிரீம்
மாம்பழ ஐஸ்கிரீம்
தேவையானவை:
பால் - ஒரு லிட்டர்,
கார்ன்ஃப்ளார் - இரண்டரை டீஸ்பூன்,
சர்க்கரை - முக்கால் கப்,
ஃப்ரெஷ் கிரீம் அல்லது கண்டன்ஸ்டு மில்க - ஒரு கப்,
ஆறிய பால் - கால் கப்,
வாழைப்பழக் கூழ் - ஒரு கப்,
பொடித்த சர்க்கரை - கால் கப்.
செய்முறை:
பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும்.
15 நிமிடம் கொதிக்கவிடவும். கார்ன்ஃப்ளாரை, ஆறிய பாலில் கரைத்து தனியே வைக்கவும். கொதிக்கும் பாலில் சர்க்கரை சேர்த்து கலக்கவும். அடி பிடிக்காதவாறு கிளரவும். இத்துடன் கார்ன்ஃப்ளார் கரைசலை சேர்க்கவும். இந்தக் கலவை 5 நிமிடம் கொதிக்கவிடவும்.. கலவை ஆறியதும், ஐஸ் ட்ரேயில் கொட்டி, பிளாஸ்டிக் ஷீட்டால் மூடி ஃப்ரீஸரில் செட்டாகும் வரை வைக்கவும். வாழைப்பழத் துண்டுகளை மிக்சியில் அரைத்து கூழாக்கவும் பிறகு ஃப்ரீஸரிலிருந்து எடுத்து, நன்றாக மிருதுவான கிரீமியாகும் வரை ‘பீட்’ செய்யவும். இப்போது வாழைப்பழக் கூழ், பொடித்த சர்க்கரை, கண்டன்ஸ்ட் மில்க ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக ‘பீட்’ செயய்வும். இதை பால் கலவையில் கலந்து, ட்ரேயில் ஊற்றி பிளாஸ்டிக் ஷீட்டால் மூடி ஃப்ரீஸரில் செட் ஆகும் வரை வைக்கவும். வாழைப்பழ ஐஸ் கிரீம் நெடி.
மேலே குறிப்பிடப்பட்டுள்ளது போலவே, ஸ்ட்ராபெரி, அன்னாசி, தர்பூசணி உள்ளிட்ட பழங்களை மிக்ஸியில் கூழாக்கில் ஐஸ் கிரீம் கலவையுடன் சேர்த்தால் உங்களுக்கு பிடித்தமான ஐஸ் க்ரீம் வீட்டிலேயே ரெடி. ஆரோக்கியமானதும் கூட.
கொளுத்தும் வெயிலை சமாளிக்க ஐஸ் கிரீம் உடன் கோடையை கொண்டாடுஙகள்.
டிப்ஸ்:
- ஐஸ்கிரீம் செய்வதற்கு 4 மணி நேரம் முன்பே, ஃப்ரீஸரை ‘டீஃப்ராஸ்ட்’
- செய்ய வேண்டும்.
- ஃபிரிட்ஜை அதிக கூலிங்-கில் வைக்க வேண்டும். பிறகுதான் ஐஸ்கிரீம் ஃப்ரீஸரில் வைப்பது சிறந்தது.
- ஐஸ்கிரீம் செட் ஆகிவிட்டதா என்று அடிக்கடி ஃப்ரிட்ஜை திறந்துப் பார்த்து கொண்டே இருக்கக் கூடாது.
- ஐஸ்கிரீமின் மிருதுத்தன்மையே, கலவையை மீண்டும் மீண்டும் நன்கு ‘பீட்’ செய்வதில்தான் உள்ளது. முட்டை அடிக்கும் கருவி அல்லது மரக்கரண்டியை இதற்கு பயன்படுத்தலாம்.
- ஐஸ் கிரீம் செய்வதென்றால் முதல் நாள் இரவே செய்துவிடுங்கள். ஐஸ் கிரீம் செட் ஆவதற்கு நேரம் எடுக்கும். 6 மணி நேரத்துக்காவது ஃப்ரிட்ஜைத் திறக்காமல் இருந்தால்தான், ஐஸ் கிரீம்‘க்ரீமி’யாக இருக்கும்.
கிரீம் செய்முறை :
வீட்டிலேயே கிரீம் செய்வதற்கு ஒரு லிட்டர் பாலை நன்கு காய்ச்சவும். அப்பொழுது மேலே படியும் பாலாடையை எடுத்துக் கொண்டே வரவும். பால் நன்கு சுண்டியதும், இதை மிக்ஸியில் ஸ்லோவாக பீட் செய்யவும். ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கிரீம் தயார்.