சீக்கிரம் டயர்ட் ஆகுறீங்களா? நயன்தாராவின் டயட் கோச் சொன்ன சூப்பர் ரெசிபி..

கேரள ஸ்பெஷல் உளுவா கஞ்சியை காலை, மாலை சிற்றுண்டிகளில் சேர்த்துக்கொள்ளும் போது உடல் ஆரோக்கியமாகவும், எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும் என்கிறார் நயன்தாராவின் டயட் கோச் முன்முன் கனேரிவால்.

Continues below advertisement

கேரளத்தின் பராம்பரிய உணவான வெந்தய கஞ்சியை (Uluva kanji) வாரத்திற்கு ஒரு முறையாவது உங்களது டயட்டில் சேர்த்துக்கொள்ளும் போது புத்துணர்ச்சியை நீங்கள் உணர்வீர்கள் என்கிறார் நயன்தாராவின் டயட் கோச் முன்முன் கனேரிவால்.

Continues below advertisement

தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நயன்தாரா. 30 வயதிற்கு மேலாகியும் லேடி சூப்பர் ஸ்டார் என்றழைக்கப்படும் நயன்தாரா இளமையாகவும் பிட்டாக இருப்பதற்கும் அவரது உடற்பயிற்சி மற்றும் யோகாசனங்கள் மட்டுமில்லாது அவரின் டயட்டும் ஒரு காரணமாக அமைகிறது. இவர் இயற்கை உணவுகள் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகள் மட்டுமில்லாது, புரோட்டீன் நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்ளவதாகவும், குறிப்பாக இவருடைய டயட் கோச் ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால் தரும் டிப்ஸ்களை தவறாமல் பின்பற்றிவருகிறார். இதனால் தான் நயன்தாரா பிட்டாக இருப்பதோடு இளைஞர்கள் பலரின் கனவு நாயகியாக எப்போதும் டயர்ட் ஆகாமல் பிஸியாக வலம் வருகிறார்.

இப்படி நீங்கள் உங்களது வாழ்க்கையில் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்டினா ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வாயிலாக தெரிவித்துள்ள ஒரு டிஸ்ஸை இனி பாலோ பண்ணுங்க.

கேரள பாரம்பரிய உணவான வெந்தய கஞ்சி ( உளுவா கஞ்சி) பருவ கால நோய்களை சமாளிப்பதற்காக எப்போதும் உட்கொள்ளப்படுகிறது. இதில் தேங்காய், வெந்தயம், சீரகம் போன்றவை சேர்க்கப்படுவதால் நல்ல சத்தாகவும், எப்போதும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் முன்முன் கனேரிவால். எனவே இந்நேரத்தில் கேரள ஸ்பெசல் வெந்தய கஞ்சி செய்யும் முறை குறித்து இங்கே தெரிந்துக்கொள்வோம்.

 

கேரள ஸ்பெஷல் வெந்தயக்கஞ்சி செய்யும் முறை:

2 டீஸ்பூன் வெந்தயம் மற்றும் 1/5 ஸ்பூன் சீரகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனை தனித்தனியாக தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் நனைய வைக்க வேண்டும். பின்னர் காலையில் தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரில், 1 கப் உடைத்த அரிசியை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் தேங்காய் துருவல், ஊறவைத்து எடுத்து வைத்த வெந்தயம் மற்றும் சீரகத்தை அதனுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இதனையடுத்து 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும் வரை வைக்க வேண்டும்.

பின்னர் ஸ்டீரிம் அடங்கியதும், அதனுடன் காய்ச்சி வைத்துள்ள மண்டவெல்லத்தை ஊற்ற வேண்டும். அதனுடன் நெய் ஊற்றி கிளறி சாப்பிடும் போது நிச்சயம் நல்ல சத்தானதாக உள்ளது. இதோடு காலை அல்லது மாலை சிற்றுண்டிகளில் சேர்த்துக்கொள்ளும் போது உடல் ஆரோக்கியமாகவும், எப்போதும் புத்துணர்ச்சியுடன் நீங்கள் இருக்க முடியும் என்கிறார் நயன்தாராவின் டயட் கோச் முன்முன் கனேரிவால்.

Continues below advertisement
Sponsored Links by Taboola