தேவையான பொருட்கள்
கருப்பு உளுந்து – 1 கப், அரிசி – 1/4 கப் ( பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி), வேர்க்கடலை – 1/2 கப், பொட்டுக்கடலை - 1/2 கப், வெல்லம் முக்கால் 3/4 கப், நெய் – 3 ஸ்பூன், ஏலக்காய் – 2, பச்சரிசி புழுங்கல் அரிசி எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அது நன்றாக சூடானதும், கருப்பு உளுந்தை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். உளுந்தை கைவிடாமல் வறுக்க வேண்டும். இதனை ஒரு தட்டுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.
அடுத்தது அரிசியை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுத்தபடியாக பொட்டுக்கடலை, வேர்க்கடலை, ஏலக்காய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக கடாயில் சேர்த்து சிவக்கும் அளவிற்கு வறுத்து, ஒரு தட்டில் கொட்டி ஆறவைக்க வேண்டும். அடுத்து வறுத்த உளுந்து வேர்க்கடலை அரிசி பொட்டுக்கடலை ஏலக்காய் ஆகிய அனைத்துப் பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் வெல்லத்தை மிக்ஸியில் சேர்த்து இரண்டு சுற்று சுற்றிக் கொள்ள வேண்டும்.
இந்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். 3 ஸ்பூன் நெய்யை ஒரு கரண்டி அல்லது கிண்ணத்தில் ஊற்றி உருக்கி அதை லட்டு மாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ( நட்ஸ் பிடிக்கும் என்றால் முந்திரி பாதாம் உள்ளிட்டவற்றை நெய்யில் சேர்த்து வறுத்து லட்டு மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம்)
தாங்கும் அளவு சூடு வந்தவுடன் இந்த கலவையை உருண்டைகளாக பிடித்துக்கொள்ள வேண்டும்.
இதை உலர்ந்த டப்பாவில் போட்டு காற்றுப்புகாமல் மூடி வைத்தால் ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்.
அவ்வளவுதான் சுவையான உளுந்து லட்டு தயார்.
உளுந்தின் நன்மைகள்
உளுந்தில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இருப்பதால், இதில் காணப்படும் புரதம் உயர் தரமாக கருதப்படுகிறது.
அத்தியாவசியமற்ற அமினோ அமிலங்களில் ஒன்றான குளுட்டாமிக் மற்றும் அஸ்பார்டிக் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.
உளுந்தில் வைட்டமின் பி9 அல்லது ஃ போலேட் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி5 வைட்டமின் கே, வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ ஆகிய வைட்டமின்கள் அடங்கியுள்ளன.
மேலும் படிக்க
Ragi Dosa :இன்ஸ்டன்டன்ட் ராகி தோசை: இப்படி செய்தால் மொறு மொறுவென சூப்பரா இருக்கும்!