தேவையான பொருட்கள்


1 கப் தேவையான அளவு ராகி மாவு


நறுக்கிய கொத்தமல்லி இலை


2 நறுக்கிய வெங்காயம்


5 நறுக்கிய கறிவேப்பிலை


3 நறுக்கிய பச்சை மிளகாய்








தேவையான அளவு உப்பு


தேவையான அளவு நீர்


செய்முறை


ஒரு பாத்திரத்தில் ராகி மாவை சேர்த்து அதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு மாவை கரைத்துக் கொள்ள வேண்டும். ( மாவை கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.


இந்த மாவில் நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலைகள், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 


அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடானதும் மாவை ஊற்றி தோசை சுட வேண்டும். ( தோசைமிகவும் மெல்லியதாக ஊற்றினால் கல்லில் ஒட்டிக் கொள்ளும். எனவே சற்று தடிமனாக ஊற்ற வேண்டும். 


அவ்வளவுதான் இதை வேக வைத்து திருப்பி போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சுவையான இன்ஸ்டன்ட்  கேழ்வரகு தோசை தயார்.