உப்புமா பிடிக்காதவர்களுக்கும் ‘அவல் உப்புமா’ பிடித்துப்போகலாம். மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களின் பிரபலமான உணவு இது. காலை உணவு, மாலை அவல் உப்புமா உடன் டீ. இதை ‘போஹா’ என்று அழைக்கின்றனர். பல வகைகளில் செய்து ருசிக்கலாம். கொத்தமல்லி, பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு ஆகியவைகள் சேர்த்து செய்யும் அவல் உப்புமா ரொம்பவே சுவையாக இருக்கும். அதோடு, 'No Cook Food' வகையில் வருகிறது 'Dadpe Poha’. இதை வேக வைக்காமலே செய்து விடலாம். செய்முறை எப்படி என்று காணலாம். 


என்னென்ன தேவை?


அவல் - ஒரு கப்


வெங்காயம் - 1


தக்காளி - 1


எலுமிச்சை சாறு - ஒரு சிறிய கப் அளவு


பச்சை மிளகாய் - 2


வறுத்த வேர்க்கடலை - ஒரு கப் 


கடுடு - ஒரு ஸ்பூன்


எண்ணெய் - தேவையான அளவு


கருவேப்பிலை - சிறிதளவு


கொத்தமல்லி - சிறிதளவு


உப்பு - தேவையான அளவு


செய்முறை


முதலில் தண்ணீரில் ஊற வைத்து அவலை வடிக்கட்டி கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் அவல், உப்பு, எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி உள்ளிட்டவற்றை சேர்த்து என்றாக கலக்கவும். இதற்கடுத்து ஒரு ஸ்டெப்தான். அவல் உப்மா ரெடி ஆகிடும். அடுப்பில் கடாய் வைத்து மிதமான தீயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தாளிப்பதற்கானவற்றை போட்டு வதக்கவும். கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் நன்றாக வதங்கியதும் வேர்க்கடலை, நறுக்கிய கருவேப்பிலை ஆகியவற்றை நன்றாக கிளறவும். பின்னர், இதை அவல் கலவையில் கொட்டி நன்றாக கிளறவும். அவ்வளவுதான். ரெடி.


பட்டாணி அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: 


அவல் - 1 கப்


வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது )


வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கப்


வேகவைத்த உருளைக் கிழங்கு - 2 


கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு


தாளிக்க:


கடுகு - 1/2 டீஸ்பூன்


பச்சை மிளகாய் - 4


மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை


கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு


எண்ணெய் - ஒரு டீஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


எலுமிச்சை சாறு - தேவையான அளவு (எலுமிச்சை பழம் தேவையில்லையெனில் சேர்க்க வேண்டாம்.)


செய்முறை



  •  அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அவலை பாலிலும் ஊற வைக்கலாம். சுவையாக இருக்கும்.

  • சிறிது நேரம் கழித்து அவலை வடிகட்டவும்.

  • கொத்தமல்லியை பச்சை மிளகாயுடன் சேர்த்தி மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.

  • கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பச்சை மிளகாய், மஞ்சள் தூள் கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து கொள்ளவும். அதனுடன்  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதோடு கொத்தமல்லி விழுதைச் சேர்க்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும். 

  • நன்றாக வதங்கிய பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி மற்றும் உருளைக் கிழங்கை சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்,  அவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  • 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். 

  • பிறகு, கொத்தமல்லி இலைகள் மேலே தூவி இறக்கவும். 

  • சுவை கொத்தமல்லி, பட்டாணி அவல் ரெடி!


இதே போல அவல் ஊறை வைத்து எடுத்து, அதில் தயிர் தாளித்து சேர்த்து செய்யலாம். தயிர் அவல். இதில் மாதுளை, முந்திரி உள்ளிட்டவற்றையும் சேர்க்கலாம். சிகப்பு அவல் பயன்படுத்தியும் இந்த ரெசிபிகளை செய்து பார்க்கலாம்.