கபாப் ஒரு சுவையான உணவு. சோயாவை சேர்ப்பதன் மூலம் வழக்கமான ஹரா பாரா கபாப்கள் ஒரு புதிய சுவையில் கிடைக்கும். இதை சிற்றுண்டியாக சாப்பிடலாம். இதில் கீரை, கொத்தமல்லி, புதினா, வெங்காயம், பட்டாணி மற்றும் மசாலாப் பொருட்கள் உள்ளன. இந்த கபாபை ஒருமுறை முயற்சித்தால் நீங்கள் நிச்சயம் மீண்டும் மீண்டும் முயற்சிப்பீர்கள். இது சுவையானது மட்டும் அல்ல ஆரோக்கியமானதும் கூட. இந்த கபாபை கெட்சப் அல்லது சட்னியுடன் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். வாங்க ஹரா பாரா கபாப் எப்படி செய்வதென்று பார்க்கலாம். 


தேவையான பொருட்கள்


1 கப் சோயா துகள்கள், 1/2 கப் பச்சை பட்டாணி, 2 கப் பாலக் கீரை நறுக்கியது, 1 வெங்காயம் பொடியாக நறுக்கியது, 2 அங்குல இஞ்சி, 6-8 பூண்டு பற்கள்,  5-6 பச்சை மிளகாய்,1 தேக்கரண்டி சாட் மசாலா,1 டீஸ்பூன் மிளகாய் தூள்,  1 தேக்கரண்டி கரம் மசாலா தூள், 1/2 தேக்கரண்டி பெருஞ்சீரக தூள், 2 டீஸ்பூன் கடலை மாவு லேசாக வறுத்தது,1/2 கப் புதினா இலைகள், 1 கப் கொத்தமல்லி இலைகள், 1/2 கப் பிரட்தூள்கள், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, சுவைக்கேற்ப -உப்பு, பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய். 


செய்முறை


1.சோயா துகள்களை 2 கப் தண்ணீர் மற்றும் ½ தேக்கரண்டி உப்பு சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும். அதிகப்படியான தண்ணீரை வடிகட்டி, பிழிந்து எடுத்து அப்படியே வைத்து விட வேண்டும்.


2.கீரை இலைகளை இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாயுடன் சுமார் 5 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்து ஆறவைக்க வேண்டும். 


3.பின் பச்சைப் பட்டாணியுடன் இந்தப் பொருட்களை ஒன்றாகக் கலக்க வேண்டும். இதை ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து கொரகொரப்பான பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


4.ஒரு பெரிய கிண்ணத்தில், இந்த கீரை கலவையை வெங்காயம், கொத்தமல்லி மற்றும் புதினாவுடன் சேர்க்க வேண்டும்.


5.மேலே பட்டியலிடப்பட்டுள்ள மசாலாக்களுடன் உப்பு சேர்க்க வேண்டும்.


6. இப்போது எலுமிச்சை சாறு மற்றும் வறுத்த கடலை மாவை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.


7.இறுதியாக, நீங்கள் வறுக்கத் தொடங்கும் முன் கலவையை பிரட்தூள்களில் புரட்டி எடுக்க வேண்டும்.


8.கலவையை கபாப்/டிக்கி போன்ற வடிவங்களில் வடிவமைத்து, மிதமான தீயில் இருபுறமும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை கெட்ச்அப் அல்லது சட்னியுடன் சூடாக பரிமாறலாம்.


மேலும் படிக்க


சசிகலாவிற்கு துரோகம்.. இபிஎஸ் சென்ற வாகனம் மீது செருப்பு, கல் வீச்சு.. பசும்பொன்னில் பரபரப்பு!


Mohammed Shami: பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஆயுதம்! இந்திய அணியின் எல்லைச்சாமியான முகமது ஷமி!