கோஜி பெர்ரி எனப்படும் Atiny fruit பாரம்பரியமாக சீனாவில் வளர்க்கப்பட்டு மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும் நன்மைகளும்  கொட்டிக்கிடக்கின்றன. அவை சருமம் முதல் கல்லீரல் என பல உடல் உறுப்புகள் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு அளிக்கிறது.

 



 

கல்லீரல் பாதுகாப்பு :


கோஜி பெர்ரியில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் கல்லீரல் சார்ந்த நோய்களை எதிர்த்து போராடுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மது அருந்துவதால் ஏற்படும் கல்லீரல் கொழுப்பு நோய்களையும் கூட குணப்படுத்த உதவுகிறது. மேலும் கல்லீரல் புற்றுநோய் உயிரணுக்களால் வளரக்கூடிய டியூமர் கட்டிகளையும் தடுக்கின்றன. கோஜி பெர்ரிகளில் zeaxanthin dipalmitate எனும் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் அவை நோய்களை எதிர்த்து போராடுவதில் பயனளிக்கும்.

கல்லீரல் மட்டுமல்ல கண்களையும் பாதுகாக்கும் இந்த பெர்ரிகள். இதில் இருக்கும் Taurine எனப்படும் அமிலம் மூளை, முதுகுத்தண்டு, தசை செல்கள், இதயம், எலும்பு, தசை திசுக்கள் மற்றும் விழித்திரை போன்ற உறுப்புகளை வலுவாக்கும்.

 




சரும பாதுகாப்பு :

நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு சருமம். இது ஆரோக்கியமாக இருக்க போதுமான அளவு ஊட்டச்சத்து அவசியம். கோஜி பெர்ரிகளில் சருமத்திற்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் உள்ளதால் அவை சருமத்திற்கு அற்புதமான நன்மைகளை அளிக்கும். சருமத்தில் ஏற்படும் அழற்சியை எதிர்க்கிறது. அதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும். இதில் இருக்கும் அமினோஅமிலங்கள் மற்றும் தாதுக்கள் சருமத்தின் தோற்றத்தை இறுக்கி வயதான தோற்றம் வராமல் தடுக்கிறது. முகப்பருக்களால் உண்டாகும் வடுக்களை சரி செய்கிறது. சருமத்தை மென்மையாக்கி புது உயிரணுக்களை வளர செய்கிறது. சூரிய கதிர்களால் பலவிதமான சரும பிரச்சனைகள் ஏற்படும்.  கோஜி பெர்ரிகளை மசித்து சருமத்தில் பூசி வர சேதமடைந்த சருமம் புத்துயிர் பெரும். சருமத்தில் ஈரப்பதத்தை தக்க வைப்பதால் சருமம் வயதாவதை தடுக்கும்.

 




சீனர்களின் உணவில் கோஜி பெர்ரி:

உலர்ந்த கோஜி பெர்ரி பழங்களை சீனர்கள் சூப் தயாரிக்கும் போது இதை ஒரு மூலப்பொருளாக பயன்படுத்துகிறார்கள்.  இதை வைத்து தயாரிக்கப்படும் தேநீரும் மிகவும் பிரபலம். பார்ப்பதற்கு உலர் திராட்சை போல இருப்பதால் இதை சிற்றுண்டியாக எடுத்து கொள்கிறார்கள்.