இந்த வெப்ப காலத்தில் எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் தனியவே தணியாது. அதனால் சிலர் உடனே ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ந்த நீரை எடுத்து குடித்துவிடுவார்கள். இதற்கு பதில் மண்பானையில் இருக்கும் தண்ணீரை குடித்தால் எவ்வளவு நன்மைகள் பெற முடியும் தெரியுமா? மண்பானை தண்ணீர் தான் அந்தகாலத்துல இருந்த ஐஸ் வாட்டர். பிளாஸ்டிக் பாட்டில், ஸ்டீல் பாத்திரங்களை உபயோகிப்பதை விட மண்பானையை பயன்படுத்துவது மிகவும் சிறப்பு.
பழங்காலத்தில் சமயலறையில் தண்ணீரானது மண்பானையில் சேமித்து வைப்பது வழக்கம். ஆனால் இன்றோ இந்த பழக்கம் குறைந்து விட்டது சில இடங்களில் காணாமலே போய்விட்டது. இருப்பினும் சிலர் கோடை காலங்களில் மண்பானையை தான் பயன்படுத்துகிறார்கள். இதன் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆயுர்வேத நிபுணர் டாக்டர் டிக்ஸா பவ்சர் தண்டு கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

மண்பானை பஞ்சபூதங்களில் ஒன்றான களிமண்ணால் செய்யப்பட்டது. நமது உடலும் இந்த பிரபஞ்சமும் கூட ஐந்து கூறுகளில் ஒன்றாகும். பூமி இயற்கையாகவே மிகவும் அமைதியானது மற்றும் குளிர்ச்சியானது. ஆனால் மண்பானையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் குளுமையை இருப்பதோடு உடலின் வெப்பத்தை சமப்படுத்தவும் உதவுகிறது.
செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு:
மண்பானையில் இருக்கும் அல்கலைன் தன்மை அதன் pH லெவல்ஐ சமநிலை படுவதால் நீரில் உள்ள அமில தன்மையை குறைத்து அசிடிட்டி மற்றும் கேஸ்ட்ரிக் பிரச்சனைகளை குறைகிறது.
மெட்டபாலிசம் அதிகரிக்கும்:
இயற்கையாகவே மண்பானைகளில் இருக்கும் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்களை போல ரசாயனம் கலக்காத சுத்தமான தண்ணீர். அதனால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.
இயற்கையான ஃபிரிட்ஜ்:
இயற்கையாகவே தண்ணீரின் வெப்பநிலையை சுமார் 5 டிகிரி வரை குறைகின்றன மண்பானைகள். இது குளிர்சாதன பெட்டிகளுக்கு சிறந்த மாற்றாக பயன்படுத்தலாம்.
ஊட்டச்சத்துக்களை தக்கவைக்கும்:
தண்ணீரின் மினெரல் மற்றும் ஊட்டச்சத்துக்களை மண்பானைகள் பாதுகாப்பதால் நம்மை சன் ஸ்ட்ரோக்கில் இருந்து காக்கிறது.
இயற்கையான சுத்திகரிப்பு:
மண்பானையில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரானது சுமார் நான்கு மணிநேரத்திலேயே சுத்திகரித்து விடும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்