தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - இரண்டு கப்
பாலக்கீரை விழுது - ஒரு கப்
இளஞ்சூடான நீர் - ஒரு கப்
ஓமம் - ஒரு ஸ்பூன்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
ஸ்டஃப்பிங்
காலிஃப்ளவர் - 200 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது - 2
மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- கோதுமை மாவில் வேக வைத்து அரைத்த பாலக்கீரை விழுது, உப்பு சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும். இதில் பால், நெய் சேர்க்கலாம். ழ்
- ஸ்டஃப்புங்கிற்கு காலிஃப்ளவரை கொஞ்ச நேரம் வேக வைத்து துருவி கொள்ள வேண்டும். அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
- தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி செயவ்தற்காக உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.
- மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
- சுட சுட பாலக் காளிஃப்ளவர் பராத்தா, தயிர், நறுக்கிய வெங்காயம், சேர்த்து சாப்பிடலாம். இதை கோபி பராத்தா என்றழைக்கப்படுகிறது.
பனீர் பராத்தா
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - இரண்டு கப்
நெய் - ஒரு டேபிள் ஸ்பூன்
ஸ்டஃப்பிங்
பனீர் - 250 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - ஒரு கைப்பிடியளவு
பச்சை மிளகாய பொடியாக நறுக்கியது - 1
மிளகாய தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
- கோதுமை மாவில் உப்பு சேர்த்து இளம் சூடான நீரை ஊற்றி சப்பாதி மாவு பதத்தில் தயார் செய்யவும். 20 நிமிடங்கள் ஊற விடவும்.
- ஸ்டஃப்புங்கிற்கு பனீரை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதோடு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் அதோடு மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
- தயாராக வைத்துள்ள கோதுமை மாவில் சப்பாத்தி உருட்டி அதில் ஸ்டஃபிங்கை கொஞ்சம் வைத்து மீண்டும் தேய்த்தெடுக்கவும்.
- மிதமான தீயில் தோசைக் கல்லில் கொஞ்சம் நெய் அல்லது எண்ணெய் தடவி சூடானதும் பனீர் பராத்தாவை போட்டு இரு புறமும் பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.