கோடைகால வெயிலுக்கு கார்பனேடட் ட்ரிங்க் ஏதும் குடிக்காமல் பழங்களில் இருந்து கிடைக்கும் ஜூஸ் குடிக்கலாம் என்று அறிவுறுத்துகின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். ஸ்மூத்தி வகைகள் சிலவற்றை காணலாம். 


வாழைப்பழ ஸ்மூத்தி


தேவையான பொருட்கள்:


தோல் நீக்கி நறுக்கிய வாழைப்பழம் -2 கப்
 யோகர்ட் -1 கப்
சியா விதைகள் - 1 தேக்கரண்டி 
 பால் -1 கப் 


செய்முறை:


பழங்களை ஸ்மூத்தாக ப்ளண்ட் செய்யவும். கோடைக்காலம் நெருங்கிவிட்டதால் குளிர்ச்சியான ஸ்மூத்தியை விரும்பினால் இதோடு ஐஸ் சேர்க்கலாம். இனிப்புக்காக தேன் சேர்க்கலாம். சர்க்கரை வேண்டாம்.  இதோடு சியா விதைகள் நட்ஸ் சேர்த்து செய்யலாம். 


பலன்கள்:


இதில் அதிகமாக  நார்ச்சத்து உள்ளது. இது உடற்பயிற்சியின்போது சாப்பிடுவதற்கு சிறந்தது. இதோடு பெர்ரி பழங்களையும் சேர்க்கலாம். பெர்ரிகளில் ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன.  சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு சத்துகள், நார்ச்சத்து மிகுந்துள்ளது.


பாலக்கீரை ஸ்மூத்தி


தேவையான பொருட்கள்:


வாழைப்பழம் - 2


பாலக்கீரை - 1 கப்


இளநீர் - 1 கப்


பேரீட்சை - 3 அல்லது தேவையான அளவு.


செய்முறை:


வாழைப்பழத்தை இரவு முழுவதும் ஃபீரிசரில் வைக்கவும். காலையில் இந்தப் பழம், பேரீட்சை, பாலக்கீரை மற்றும் இளநீர் ஆகியவற்றை சேர்த்து அரைக்கவும். இதனுடன் ஐஸ் சேர்த்து, தேவையான அளவுக்கு ஸ்மூத்தியாக செய்யவும். சுவையான ஸ்மூத்தி தயார்.


அவகோடா கிவி ஸ்மூத்தி


தேவையான பொருட்கள்:


கிவி - 3 
வெள்ளரிக்காய் - 1 
கொத்தமல்லி - சிறிதளவு
அவகோடா - 1
எலுமிச்சை - ஒரு டேபிள் ஸ்பூன்


செய்முறை:


கொத்தமல்லி, கிவி, வெள்ளரிக்காய், அவகேடோ உள்பட அனைத்தையும் நறுக்கி மிக்ஸியில் ஸ்மூத்தாக அரைத்தெடுத்து கொள்ளவும். இதனுடன் ஐஸ் சேர்த்து மீண்டும் அரைக்கவும். இதை அப்படியே அருந்தலாம் அல்லது வடிகட்டியும் அருந்தலாம்.


இதோடு பச்சை திராட்சை சேர்த்தும் செய்யலாம். இனிப்பு சுவைக்கு ஏற்றவாறு தேன் சேர்க்கலாம். 


பலன்கள்:


அவகேடோ உடல்நல ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. கிவி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். 


மாம்பழ ஸ்மூத்தி


என்னென்ன தேவை?


தேங்காய் பால் - 1/2 கப்


மாம்பழம் - 3


குளிர்ந்த பால் - 1/4 கப்


தயிர் -2 


தேன் - 1 டேபிள் ஸ்பூன்


பாதாம் - 4


உலர் திராட்சை -4


செய்முறை:


தோல் நீக்கிய மாம்பழ துண்டுகள், தேங்காய்  பால், குளிர்ந்த பால், தயிர், தேன், சர்க்கரை, பாதாம், உலர் திராட்சை ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு, நன்கு  மென்மையாக அடித்துக் கொள்ள வேண்டும். சுவையான மாம்பழ  ஸ்மூத்தி தயார். இதை பால் சேர்த்தும் செய்யலாம்.


திராட்சை ஸ்மூத்தி


திராட்சை -2 கப்


வாழைப்பழம் - 1 


யோகர்ட் -1 கப்


சியா விதைகள் - 1 தேக்கரண்டி 


பால் -1 கப் 


எலுமிச்சை சாறு - சிறிதளவு


செய்முறை:


பழங்களை ஸ்மூத்தாக ப்ளண்ட் செய்யவும். கோடைக்காலம் நெருங்கிவிட்டதால் குளிர்ச்சியான ஸ்மூத்தியை விரும்பினால் இதோடு ஐஸ் சேர்க்கலாம். இனிப்புக்காக தேன் சேர்க்கலாம். சர்க்கரை வேண்டாம்.  சியா விதை சேர்த்து சாப்பிடலாம். 


ஓரே நிறத்தில் உள்ள பழங்களை வைத்து ஸ்மூத்தி செய்து அருந்தால். க்ரீன் அப்பிள், பச்சை திராட்சை, கிவி, வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை சேர்த்து ஸ்மூத்தி செய்யலாம்.


தினமும் பழங்களை சாப்பிடுவது நல்லது. சரிவிகித உணவு, சீரான உடற்பயிற்சி உள்ளிட்டவைகள் ஆரோக்கியமான உடலுக்கு அவசியமானவை. பாக்கெட்களில் அடைத்து விற்படும் உணவுகளைத் தவிப்பது குடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சிறுதானியங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை தினமும் டயட் லிஸ்டில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.  அந்தந்த பருவநிலைக்கு ஏற்றார்போல  கிடைக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். ஆரோக்கியமான சாப்பிடுவது உடல்நலத்தை பேணி பாதுகாக்க உதவும்.