நோய்கள் மலிந்து காணப்படுவதால் மக்கள் உடல்நலன் மீது அக்கறை காட்டுவதும் அதிகரித்துள்ளது. ஆரோக்கியமான உணவைத் தேடி மக்கள் ஓடத் தொடங்கியுள்ளனர். குளுட்டன் ஃப்ரீ டயட். அண்மைக்காலமாக இந்த வகை உணவு மிகவும் பிரபலமாகியுள்ளது. க்ளுட்டனை எல்லோரும் தவிர்க்க வேண்டாம். ஆனால் சீலியாக் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் க்ளுட்டனை நிச்சயமாக தவிர்க்க வேண்டும்.


க்ளூட்டன் என்றால் என்ன?
க்ளூட்டன் என்பது ஒரு வகை புரதம். இது பசைத்தன்மை நிறைந்தது. கோதுமை, பார்லி வகை தானியங்களில் இந்த க்ளுட்டன் அதிகம். இதன் சிறப்பம்சங்கள் பசைத்தன்மயும், நெகிழ்வுத் தன்மையும். அதுமட்டுமல்ல இந்த க்ளுட்டனை மென்று சாப்பிட மிகவும் எளிதானது. அதனாலேயே இவை பிரெட், பிஸ்கட், ரஸ்க், பேக்கரி உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.


வயதான சிலருக்கு மட்டுமே இந்த க்ளுட்டன் புரதத்தால் அஜீரணக் கோளாறு ஏற்படும். அவர்கள் மட்டுமே க்ளுட்டன் ஃப்ரீ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். க்ளுட்டன் உள்ள உணவுகளான சப்பாத்தி , பிரட், ரவை அல்லது சேமியா சாப்பிட்டால் இவர்களுக்கு வயிற்றுவலி, அடிக்கடி மலம் கழிப்பது, நாள்பட்ட வயிற்றுப்போக்கு, சோர்வு, மலச்சிக்கல், போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் நமக்கு க்ளுட்ட அலர்ஜி இருப்பதாஇ நாமாகவே இந்த பொதுப்படையான அறிகுறிகளை வைத்து உறுதி செய்யக் கூடாது. முறையாக மருத்துவரை ஆலோசித்து மருத்துவப் பரிசோதனை மூலமே உறுதிப்படுத்த வேண்டும்.


சில க்ளுட்டன் ஃப்ரீ ரெசிபிக்கள்


1. ஓட்ஸ் இட்லி


தேவையான பொருட்கள்: இரண்டு கப் ஓட்ஸ். அரை கப் தயிர். 1 மேஜைக்கரண்டி கடுகு. 1 மேஜைக்கரண்டி உளுந்து. அரை மேஜைக்கரண்டி சன்னா தால், அரை மேஜைக்கரண்டி எண்ணெய், 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் (மெலிதாக வெட்டியது), 1 கப் துருவிய கேரட், 2 டேபிள்ஸ்பூன் மல்லு, (மெலிதாக வெட்டியது), அரை டேபிள்ஸ்பூன் மஞ்சள் தூள், 2 மேஜைக்கரண்டி உப்பு மற்றும் ஒரு சிட்டிகை பழ உப்பு.


செய்முறை: ஒரு தவாவில் ஓட்ஸை வறுத்தெடுக்கவும். பின்னர் அதை மிக்ஸரில் பொடித்துக் கொள்ளவும். பின்னர் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சன்னா தால் ஆகியனவற்றை சேர்த்து வறுக்கவும். எல்லாம் பொன்னிறமாக மாறியவுடன் அடுப்பை அனைத்துவிட்டு அதில் நறுக்கிய மிளகாய், வெட்டிய கொத்துமல்லி இலைகள், துருவிய கேரட் ஆகியனவற்றை சேர்க்கவும். இத்துடன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பின்னர் இதை பொடி செய்யப்பட்ட ஓட்ஸில் சேர்த்து அத்துடன் தயிர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கிக் கொள்ளவும். இந்த பதம் வரும் வரை தயிர் சேர்க்கவும். பின்னர் இதனை இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்து எடுக்கவும்.


2. கேழ்வரகு ரொட்டி:


தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு – ½ கிலோ, பெரிய வெங்காயம் – ½ கிலோ, கொத்தமல்லி இலை அல்லது முருங்கை இலை – இரண்டு கைபிடி அளவு, கருவேப்பிலை – ஒரு கொத்து, நல்லெண்ணெய் – தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு, பச்சை மிளகாய் – 2


செய்முறை: பெரிய வெங்காயம், கொத்தமல்லி இலை அல்லது முருங்கை இலை, கருவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக அரிந்து கொள்ளவும். கேழ்வரகு மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.கேழ்வரகுடன் நறுக்கியவைகள் மற்றும் தேவையான நீர் சேர்த்து சிறிது தளர்வாக பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை 1/4 மணி நேரம் ஊற விடவும்.
தோசைக் கல்லை சூடு படுத்திக் கொள்ளவும். ஓரளவு சூடானதும் ஒரு கை அளவு கேழ்வரகு மாவுக் கலவையை எடுத்து கல்லின் நடுவில் வைத்து கை விரல்களால் மிருதுவாக அனைத்துப் பக்கங்களும் சமமாக இருக்குமாறு அழுத்தி விடவும். ஓவ்வொரு பக்கமும் ஒரு நிமிடம் என்று நான்கு முதல் ஐந்து தடவை திருப்பிப் போடவும். தேவைப்பட்டால் எண்ணெய் சேர்க்கவும்.


3. அவல் உணவு வகைகள்:


இருப்பதிலேயே மிகவும் எளிமையான உணவு என்றால் அது அவல் தான். அவலை நாம் பால் ஊற்றி சர்க்கரை சேர்த்து சாப்பிடுவோம். இதை உப்புமாவாக செய்து சாப்பிடலாம். அவலில் கொஞ்சம் எலுமிச்சையோ அல்லது தயிரோ சேர்த்து சாப்பிடலாம். தாக்காளி சேர்த்தும் கொஞ்சம் உப்பு, மிளகு, கொத்தமல்லி இலை சேர்த்து சாப்பிடலாம். பிரெட்டை பொடிதாக அரிந்து வறுத்து அத்துடன் ஊறவைத்த அவல், துருவிய கேரட், நறுக்கிய வெங்காயம் ஆகியன சேர்த்து சாப்பிடலாம். அவலைப் பொறுத்தவரை அன்றாடம் அதை புதிய புதிய வகைகளில் தயார் செய்யலாம். ஃப்ரூட் சேலட் போல் பழங்களுடனும் ஊறவைத்த அவல் சேர்த்து சாப்பிடலாம். மாதுளை, க்ரான்பெர்ரீஸ் கூட சேர்த்து சாப்பிடலாம்.


3. பனீர் பேசன் சில்லா


தேவையான பொருட்கள்: ஒரு கப் கடலைமாவு, அரை தேக்கரண்டி உப்பு, 1 தேக்கரணி மிளகுத்தூள், ஒரு வெங்காயம் சிறியதாக நறுக்கியது, 1/2 கப் பனீர் துருவியது, 1 தக்காளி, 2 பச்சை மிளகாய், அரை தேக்கரண்டி ஓமம், அரை கப் மல்லி இலை, 1 கப் தண்ணீர்.


செய்முறை: ஒரு கோப்பையில் கடலைமாவு எடுத்துக் கொள்ளவும். அதில் உப்பு, மிளகுத் தூள், நறுக்கிய வெங்காயம், நறுக்கிய தக்காளி, துருவிய பனீர், பச்சை மிளகாய், ஓமம், மல்லி இலை ஆகியனவற்றை சேர்க்கவும். பின்னர் எல்லாவற்றையும் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்து கொள்ளவும். கட்டிப்படாமல் ஒரு விஸ்கர் வைத்துக் கலந்து கொள்ளவும். ஒரு தோசை தவாவில் அந்த மாவை பரப்பிவிட்டு சுற்றிலும் எண்ணெய் ஊற்றவும். அதை நன்றாக வேகவைக்கவும். இரண்டு புறமும் புரட்டிப் போட்டு வேக வைக்கவும். பின்னர் மேலே துருவிய பனீர் சேர்க்கவும். சுவையான பனீர் பேசன் சில்லா சேர்க்கவும்.


4. மஷ்ரூம் பிரவுன் ரைஸ்


தேவையான பொருட்கள்: ஒரு கப் பிரவுன் பாஸ்மதி அரிசி. 9 முதல் 10 காளான்கள். ஒரு வெங்காயம் பொடியாக நறுக்கியது. அரை கப் வெண்ணெய். ஒரு பச்சை குடைமிளகாய் மற்றும் ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு. 2 கப் தண்ணீர்.


செய்முறை: பிரவுன் ரைஸை நன்றாக கழுவிக் கொள்ளவும். அதை ஊறவைத்துக் கொள்ளவும். பின்னர் காளான், வெங்காயம், குடை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பேனில் வெண்ணெய் சேர்த்து அதில் வெங்காயத்தை நன்றாக வதக்கவும். பின்னர் அதில் காளான் சேர்க்கவும். நன்றாக வதங்கிய பின்னர் அதில் குடைமிளகாய் சேர்க்கவும். பின்னர் உப்பு, மிளகு சேர்த்துக் கொள்ளவும். அரிசையைக் கொட்டி 15 நிமிடங்கள் நன்றாக சமைக்கவும்.