இஞ்சி செரிமானத்துக்கு உதவக்கூடியது. இதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. தற்போது நாம் இஞ்சி சட்னி ரெசிபி தான் பார்க்க போகின்றோம். இந்த சட்னியை செய்து உணவில் சேர்த்து வந்தால், உங்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கி, வயிறு சீராகும். உடலில் வயிறு மற்றும் குடல் ஆரோக்கியம் நன்றாக இருந்தாலே போதும் ஒட்டுமொத்த உடலும் நன்றாக இருக்கும்.  இந்த சட்னியை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். 


தேவையான பொருட்கள் 


எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்







இஞ்சி – அரை கப் (நறுக்கியது)








வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)








பச்சை மிளகாய் – 6








காய்ந்த மிளகாய் – 6








புளி – நெல்லிக்காய் அளவு 








துருவிய தேங்காய் – ஒரு டேபிள் ஸ்பூன்








கொத்தமல்லி இலை – அரை கப்








உப்பு – ஒரு ஸ்பூன்








வெல்லம் – ஒரு துண்டு








தாளிக்க தேவையான பொருட்கள்








எண்ணெய் – ஒரு ஸ்பூன்








உளுத்தம் பருப்பு – கால் ஸ்பூன்








சீரகம் – கால் ஸ்பூன்








கடுகு – கால் ஸ்பூன்







பெருங்காய தூள் – ஒரு சிட்டிகை




 



கறிவேப்பில்லை – ஒரு கொத்து


செய்முறை 





கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும்,  அதில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், புளி  சேர்த்து நன்றாக  வதக்கிக் கொள்ள வேண்டும்.








வெங்காயம் பாதியளவு வதங்கியவுடன், அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்க வேண்டும்.








இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறிவிட்டு, ஆற வைக்க வேண்டும்.








ஆறிய அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.








தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.







ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளிக்க வேண்டும்.





இந்த தாளிப்பை சட்னியில் சேர்த்தால் சுவையான இஞ்சி சட்னி தயார்.