இட்லி தோசைக்கு ஒரு சுவையான சைடிஷ் தயாரிக்க விரும்பினால், நீங்கள் பூண்டு சட்னியை முயற்சிக்கலாம். இதை குறைந்த நேரத்தில் மிக எளிமையாக செய்து விட முடியும். மேலும் சாப்பிடுவதற்கு நல்ல காரசாரமாக சுவையாக இருக்கும். ஸ்பைசியான ஒரு சைடிஷை முயற்சிக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு நல்ல சாய்ஸ். வாங்க பூண்டு சட்னி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள் 


நல்லெண்ணெய் - இரண்டு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 10, காஷ்மீரி மிளகாய் - 3, தக்காளி – 3,  பூண்டு – 100 கிராம், உப்பு – தேவையான அளவு,


தாளிக்க: நல்லெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து - அரை ஸ்பூன், கருவேப்பிலை - ஒரு கொத்து.


செய்முறை


முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு 100 கிராம் பூண்டு பற்களை தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுப்பில் கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் ரெண்டு டேபிள் ஸ்பூன் விட்டுக் கொள்ளுங்கள். (நல்லெண்ணெய் சேர்த்து செய்தால் இந்த சட்னி சுவையாக இருக்க வேண்டும். )


எண்ணெய் காய்ந்ததும் அதில் பத்து வரமிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து மிதமான தீயில் நன்கு வதக்க வேண்டும். (மிளகாய்கள் நிறம் மாறி விடக்கூடாது )இதனுடன் நிறத்திற்காக மூன்று காஷ்மீரி மிளகாய்களை சேர்த்துக் கொள்ளலாம். வறுபட்ட மிளகாயை தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். 


முழு தக்காளி பழத்தை அதன் அடிப்பகுதியில் லேசாக கீறி முழு பழமாக எண்ணெயில் சேர்த்து வதக்க வேண்டும்.  தக்காளி பழம் நன்றாக சுறுண்டு வதங்கி வர வேண்டும். சாறு அப்பொழுது தான் நமக்கு அதே சுவையில் அப்படியே கிடைக்கும்.


பின்னர் அதே கடாயில் மீதம் இருக்கும் எண்ணெயில் நீங்கள் தோல் உரித்து வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.


பின்னர் வதக்கிய பூண்டு, வறுத்து வைத்துள்ள மிளகாய் மற்றும் தக்காளி பழங்களை மிக்சி ஜாரில் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு  சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்து இதனுடன் சேர்த்தால் போதும். சுவையான பூண்டு சட்னி தயார். இதை நீங்கள் இட்லி, தோசை உடன் வைத்து சாப்பிடலாம். மிகவும் நன்றாக இருக்கும். 


மேலும் படிக்க:


தஞ்சையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன - அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா


Cyclone Michaung: நெருங்கும் மிக்ஜாம் புயல்! 12 முக்கிய எச்சரிக்கைகளை பிறப்பித்த தமிழ்நாடு அரசு: அவை என்னென்ன?