கேரளா கூட்டு கறி ஒரு சுவையான உணவு. இதை மிக குறைந்த நேரத்தில் எளிமையாக செய்து விட முடியும். கேரட், சேனைக்கிழங்கு, சுண்டல், பட்டாணி, உருளைக்கிழங்கு உள்ளிட்ட பல்வேறு காய்கள் மற்றும் பருப்பு வகைகள் சேர்த்து செய்வதால் இது ஒரு ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவாகவும் இருக்கும். சாதத்திற்கு இதை சைடிஷ் ஆக வைத்து சாப்பிடலாம். சப்பாத்திக்கும் இதை சைடிஷாக வைத்து சாப்பிடலாம். மிகவும் சுவையாக இருக்கும். வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுண்டல் - 1 கப் (வேக வைத்தது) பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது) வாழைக்காய் - 1 (தோல் சீவி, வேக வைத்தது) சேனைக்கிழங்கு - 1 கப் (நறுக்கியது) கேரட் - 1/2 கப் (நறுக்கியது) பூசணிக்காய் - 1/2 கப் (நறுக்கியது) உருளைக்கிழங்கு - 1/2 கப் (நறுக்கியது) மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன் மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு
மசாலாவிற்கு
தேங்காய் - 1 கப் (துருவியது) வரமிளகாய் - 3 சீரகம் - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு
கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன் கறிவேப்பிலை - சிறிது தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் துருவிய தேங்காய் , வரமிளகாய், சீரகம் ஆகிய பொருட்களை வாணலியில் போட்டு, லேசாக வறுத்து, நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சுண்டல், பட்டாணி, வாழைக்காய், சேனைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து, 3-4 விசில் விட்டு இறக்கி கொள்ள வேண்டும்.
பின் ப்ரஷர் இறங்கியதும் மீண்டும் அந்த குக்கரை அடுப்பில் வைத்து அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, 10-15 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இறுதியில் ஒரு சிறிய கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குக்கரில் உள்ள கலவையில் ஊற்றி கிளறிவிட்டால், சூப்பரான கேரளா ஸ்டைல் கூட்டு கறி தயார்.
மேலும் படிக்க
"பெண்கள் மீதான வெறுப்ப நியாயப்படுத்துறது வெக்கமா இருக்கு" நாடாளுமன்றம் வரை சென்ற அனிமல் பட சர்ச்சை
TN Rain Alert: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - எத்தனை நாட்களுக்கு? மழை நிலவரம் இதோ!