விநாயகர் சதுர்த்தி உலகில் பரவலாக வசிக்கும் இந்து மதத்தினரால் பெரும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக நமது வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த கடவுள் என்றால் அது முழுமுதற் கடவுளான விநாயகர் ஒருவரே ஆகும். ஏனென்றால் விநாயகர் என்பவர் அனைவராலும் பெருமளவில் ஈர்க்கப்பட்ட கடவுளில் ஒரு கடவுள்.


பிள்ளையார்


நமது கிராமங்களில் விநாயகரை  கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவுபவர் நம்முடைய பிள்ளையார் தான் என்று அனைவராலும் சொல்லப்படுகின்ற ஒரு கடவுள் ஆவார். பிள்ளையார் மேல் உள்ள பாசத்திற்கும் பக்திக்கும் நமது ஊர்களில் பஞ்சமே இருக்காது. இத்தகைய  எப்பொழுதும் இவ்வளவு பாசம் மற்றும் பக்தி உள்ள பிள்ளையாரின் உருவம் ஆனது ,நாம் விநாயகர் சதுர்த்தி கொண்டாடும். இந்த நாளானது அவரது பிறந்த நாளாகும் கருதப்படுகிறது.


வேண்டுதல்


அதனால் விநாயகர் தோற்றம் நிகழ்ந்த  இன்றைய நாளில் நாம் வேண்டிக் கொள்ளும் அனைத்தும் அப்படியே நிறைவேறும் என்பது நம்முடைய நம்பிக்கை. விநாயகரை இப்படித் தான் கும்பிட வேண்டும் என்ற எந்த வரைமுறையும் கிடையாது. நாம் மனதார ஒருமுறை அவரின் பெயரை உச்சரித்தாலே அவர் மனம் நிறைந்து நம்முடன் வந்து விடுவார் என்று நம் முன்னோர்களால் கூறப்பட்டு வருகிறது.


வணங்கும் முறை மற்றும் தேவையான பொருட்கள்


நாம் பிள்ளையாரை விநாயகர் சதுர்த்தி அன்று எவ்வாறு வணங்கவேண்டும் மற்றும் அவரை வழிபட தேவையான பொருட்கள் ஆகியவற்றை நாம் இப்போது பார்ப்போம்:


முதலில் வீட்டையும், வீட்டை சுற்றியும் முதலில் சுத்தம் செய்ய வேண்டும். பூஜை அறை மற்றும் பூஜை பொருட்களை சுத்தம் செய்து, சந்தன, குங்குமம் ஆகியவற்றை வைத்துக் கொள்ளுங்கள்.  தலைவாசலில் மாக்கோலம் இட வேண்டும். வீட்டின் வாசலில் மாவிலைத் தோரணம் கட்டுவது மிகவும் நல்லது.


பொதுவாக விநாயகரின் நமது ஊர்களில் அதிகமாக பார்ப்பது அரச மரத்தின் அடியிலேதான். ஏனென்றால்  அரசமரம் ஆனது  விநாயகருக்கு ஒரு  இஷ்ட விருட்சமாக உள்ளது. மேலும் அரசமர இலையில் விநாயகரின் ரூபம் இருப்பதாக பல ஆண்டுகளாக  ஐதீகம் உள்ளது. இதனால் விநாயகர் சதுர்த்தி அன்று  அரச இலையில் தோரணம் கட்டுவது இன்னும் சிறப்பானதாக கருதப்படுகிறது.


பின்னர் பூஜை அறையில் குத்துவிளக்கு, காமாட்சி விளக்கு போன்றவற்றிற்கு எண்ணெய் ஊற்றி, திரி போட்டு தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். விநாயகரை அமர வைக்கும் பலகையை மஞ்சள் தடவி மாக்கோலமிட்டு அல்லது ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.


அதன் மேல் வாழை இலையை விரித்து பச்சரிசியை பரப்பி கொள்ள வேண்டும். விநாயகரை முந்தைய நாளே வாங்கி வைத்திருக்க வேண்டும். இப்படி வாங்கும் விநாயகர் சிலையை வாங்கிக் கொண்டு வருவது ஆனாலும் சரி வெறும் கைகளில் கொண்டு வரக் கூடாது. தட்டு அல்லது  மனப்பலகை மரத்தினால் ஆன பலகையை எடுத்துக் கொண்டு போக வேண்டும்.


மண் பிள்ளையார் மிகவும் நல்லது. பிள்ளையாரை வாங்கிக் கொண்டு வந்து பரப்பி வைத்த பச்சரிசியின் மேல் அமரச் செய்ய வேண்டும்.பிள்ளையாருக்கு  துண்டு உடுத்தி, பூணூல் செய்து அதனை படைக்க  வேண்டும்.அவருக்கு மூன்று இழைகள் கொண்ட வெள்ளை நூலில் சந்தனம் தடவி கொள்ளுங்கள். உங்கள் பிள்ளையாருக்கு பொருந்தும்படி இடது பக்க தோளில் பூணுலை சாற்றி வலது பக்க இடுப்பில் மூன்று முடிச்சுகள் போட்டுக் கொள்ளுங்கள்.


பின்னர் சந்தனம், குங்குமம் இட்டு எருக்கம் மாலை போட்டு, அருகம்புல் வைத்து, மணம் மிக்க மலர்கள் கொண்டு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். பிள்ளையாருக்கு பொதுவாக கொழுக்கட்டை ஆனது விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு உணவாகவே படைக்கப்படுகிறது ஏனென்றால் கொழுக்கட்டை என்று தனி சிறப்பு உள்ளது. இந்த காலத்தில் கம்பு சோளமானது அதிக அளவில் விளைச்சல் கொடுக்கும்.நாம் அதையும் படைக்கலாம்.


இதனுடன் பிள்ளையாருக்கு மிகவும் பிடித்த அப்பம், மோதகம், பச்சரிசி, முறுக்கு, சுண்டல், பால் பாயாசம் மற்றும் பழங்கள் ஆகியவற்றை படைக்க வேண்டும்.இவற்றுடன் தீர்த்தமாக சுத்தமான தண்ணீரில் மஞ்சள் கலந்து வைக்கவேண்டும். தேங்காய், பூ, பழம், வெற்றிலை போன்ற தாம்பூழத்தை தவறாமல் வைக்க வேண்டும்.


இதன் பின்னர் தீபம் ஏற்றி விநாயகர் மந்திரத்தை நாம் உச்சரிக்க வேண்டும்.அதன் பிறகுதூப, தீபம் காண்பித்து, கற்பூர ஆரத்தி எடுத்து முடித்த பின் தண்ணீரால் கற்பூரத்தை சுற்றி நைவேத்தியத்தை ஏற்றுக் கொள்ளுமாறு மும்முறை ஊற்ற வேண்டும்.பிள்ளையார் நம்மிடம் இருக்கும்  எளிமையான உணவினை வைத்து வழிபட்டாலே நம்மை ஏற்றுக் கொள்வார்.


பின்னர் நாம் செய்து தவறை மன்னிப்பு கேட்பதாக எண்ணி நாம் மூன்று முறை தோப்பு காரணம் இட்டால் அவர் மன்னித்து விடுவார் என்பது நம்பிக்கை. இதன்பிறகு மூன்று நாள் நமது வீட்டிலேயே வைத்து வழிபட்ட பிறகு நமது வீட்டின் அருகில் உள்ள நீர்நிலைகளில் அவற்றை கரைத்து விட வேண்டும் என்பது ஒரு நம்பிக்கையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இவ்வாறு வழிபட்டால் விநாயகரின் முழு அருளும் நமக்கு கிடைக்கும் என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது. இத்தகைய முறையில் வழிபட்டு நாமும் கணேசனின் முழு அருளை பெறுவோம்.