பார்ட்னருடன் டேட்டிங் என்றாலே பெரும்பாலும் ஏதோ ஒரு கஃபேக்களுக்கு செல்வதாகவே இருக்கும். ஆனால் காபி டேட்களை வீட்டிலேயே அழகாக உருவாக்கலாம். அதற்கான ரெசிப்பிகள் கீழே..

காபி அஃபோகாடோ சாக்லேட்:

தேவையான பொருட்கள்

எஸ்பிரெசோ (2 ஷாட் - 60 மிலி)

வெண்ணிலா ஐஸ்கிரீம் (200 மிலி)

HCF (சாக்லேட் சிரப்) (30 மிலி)

சாக்லேட் பிஸ்கட் குச்சி (1 குச்சி)

செய்முறை

மார்டினி கிளாஸ் எடுத்து, சாக்லெட் சிரப்பை ஊற்றவும்.அதில் 2 ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்க்ரீம் சேர்க்கவும். ஐஸ்கிரீமின் மேல் 2 ஷாட் எஸ்பிரெசோவை ஊற்றவும். இதையடுத்து 1 சாக்லேட் சுருட்டு குச்சியை எடுத்து இரண்டாக உடைத்து, கிளாஸின் மீது வைக்கவும்.

ஐரிஷ் கேரமல் ஃப்ராப்பே

தேவையான பொருட்கள்

பால் (80 மிலி)

எஸ்பிரெசோ (1 ஷாட் - 30 மிலி)

வெண்ணிலா ஐஸ்கிரீம் (2 ஸ்கூப் - 200 மிலி)

ஐரிஷ் சிரப் (20 மிலி)

கிரீம் கிரீம் (1 ஷாட் - 30 கிராம்)

ஐஸ் கட்டிகள் (40 கிராம்)

கேரமல் சாஸ் (30 மிலி)

செய்முறை

பால், எஸ்பிரெசோ, ஐஸ் க்யூப்ஸ், ஐரிஷ் சிரப், 20 மில்லி கேரமல் சாஸ் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஆகியவற்றை கலக்கவும்.அந்தக் கலவையின் மேல் கிரீம் சேர்க்கவும்.

எஸ்பிரெசோ கான் பண்ணா

தேவையான பொருட்கள்

எஸ்பிரெசோ 1 ஷாட் (30 மிலி)விப் க்ரீம்

செய்முறை

ஒரு ஷாட் கிளாஸை எடுத்து, எஸ்பிரெசோவை நேரடியாக ஷாட் கிளாஸில் ஊற்றவும், எஸ்பிரெசோவின் மேல் 1 ஷாட் விப் க்ரீம் சேர்க்கவும்