தேவையான பொருட்கள் 


வேக வைத்த உருளைக்கிழங்கு - மூன்று, வெள்ளை அவல் - ஒரு கப், பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, துருவிய இஞ்சி- சிறிதளவு, பூண்டு - ரெண்டு பல், மஞ்சள் தூள் - கால் ஸ்பூன், மிளகாய் தூள் - ஒரு ஸ்பூன், தனியா தூள் -அரை ஸ்பூன், கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், எலுமிச்சை சாறு - ஒரு ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு, உப்பு -தேவையான அளவு.




செய்முறை




முதலில் மூன்று மீடியம் சைஸ் உருளைக் கிழங்குகளை  வேக வைத்து தோல் உரித்து நன்கு ஸ்மாஷ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.


அவலை 15 நிமிடம் ஊற வைத்து  வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.  இதை உருளைக்கிழங்குடன் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டும்.


பின்னர் இவற்றுடன் பொடி பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். காரத்திற்கு இரண்டு பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி  இதனுடன் சேர்க்க வேண்டும்.


ரெண்டு பல் பூண்டு மற்றும் அதே அளவிற்கு இஞ்சி ஆகியவற்றை நசுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை தேவையான அளவிற்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிது எலுமிச்சை சாறை பிழிந்து சேர்த்துக்கொள்ள வேண்டும். 


சுத்தம் செய்த கொத்தமல்லியை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்க வேண்டும்.  கட்லட்டிற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ள வேண்டும்.


கெட்டியான இந்த கலவையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாவெடுத்து, உருண்டைகளாக தட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் கட்லெட் போல தட்டையாக தட்டி ஒரு பிளேட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் வைத்து பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு சிவக்க பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும். 


மேலும் படிக்க


Entertainment Headlines: சில்க் ஸ்மிதா பயோபிக்.. கண்கலங்கிய உறியடி விஜய்.. ஜோவிகா எவிக்‌ஷன்.. சினிமா ரவுண்ட்-அப்!


Vijayakanth Health Condition: விஜயகாந்த் உடல்நிலை தற்போது எப்படி உள்ளது? ஏபிபி நாடுக்கு மருத்துவமனை அளித்த பிரத்யேக தகவல்


School Holiday: புயல் எச்சரிக்கை! டிசம்பர் 4ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை...எந்தெந்த மாவட்டங்கள்?