பளபளப்பான மற்றும் அழகான சருமத்தை விரும்புபவர்கள் அதற்காக அக்கரை எடுத்துக் கொள்கின்றனர். உங்கள் உணவு உங்கள் சருமத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?. உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதில் டிடாக்ஸ் பானம் முக்கிய பங்கு வகிக்கின்றது. வீட்டில் தயாரிக்கப்பட்ட  சத்து நிறைந்த இயற்கை பானங்கள்  உங்கள் சருமத்தை மேலும் அழகாக்க உதவும். இதில் மசாலாப் பாலும் அடங்கும் தற்போது நாம் மசாலாப்பாலின் நன்மைகள் குறித்து தான் பார்க்கப் போகின்றோம். 


மசாலா பால் அல்லது மசாலா தூத் என்பது பாலுடன் பருப்புகள் மற்றும் மசாலாப் பொருட்களைக் கலந்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய பானமாகும். இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ சுவைக்கலாம். இந்த பானம் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது மற்றும் பரந்த அளவிலான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த பானத்தை உட்கொள்வதால் சருமத்திற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்துப் பார்க்கலாம். 


1. ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்தது


இந்த பானத்தில் உள்ள கொழுப்புச் சத்து நீண்ட காலத்திற்கு உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். மேலும் மிருதுவான சருமத்தைப் பெறவும் இது உதவுகிறது.


2. புரதம் நிறைந்தது


நமது சருமத்தின் கட்டமைப்பை பராமரிக்க புரதம் அவசியம். மசாலா தூத்தில் பால் மட்டுமின்றி பாதாம், பிஸ்தா போன்ற பருப்புகளும் இருப்பதால் அதில் அதிக புரதச்சத்து உள்ளது. எனவே இது சருமத்தை அழகாக வைக்க உதவுகிறது.


3. வயதான எதிர்ப்பு விளைவுகள் இருக்கலாம்


இந்த பானத்தில் சேர்க்கப்படும் கொட்டைகளில் வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. தோல் வயதான மற்றும் அழற்சியின் விளைவுகளை எதிர்த்துப் போராடுவதில் இவை முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது. எனவே, மசாலா பால் உட்கொள்வது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்தவும், சுருக்கங்களைக் குறைக்கவும் உதவும் என சொல்லப்படுகிறது


4. உங்கள் சருமத்தை சேதத்திலிருந்து பாதுகாக்கலாம்


இந்த பானத்தில் சேர்க்கப்படும் பருப்புகள், குங்குமப்பூ மற்றும் ஜாதிக்காய் போன்ற பொருட்களில் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் புற ஊதா கதிர்வீச்சு காரணமாக ஏற்படும் சேதங்களை எதிர்த்துப் போராடுவதில் இவை முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த பானம் தோல் நிறத்தை மேம்படுத்தவும் உதவும் என சொல்லப்படுகிறது.


வீட்டில் மசாலா பால் செய்வது எப்படி?


 பாதாம், ஓடுடன் கூடிய பிஸ்தா,  ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். குங்குமப்பூ இழைகளை ஒரு சிறிய அளவு வறுத்து பின்னர் நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தையும் அரைத்த ஜாதிக்காயுடன் கலந்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான் உங்கள் மசாலா பாலுக்கான மிக்ஸ் தயாராகி விட்டது. இதை நீங்கள் ஒரு கண்னாடி குடுவைக்குள் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள்  மசாலா பால் குடிக்க விரும்பினால், 1 கப் பாலுடன் 1 டீஸ்பூன் மசாலா பொடியை கலந்து குடிக்கலாம். இனிப்புக்காக இதனுடன் தேன்  அல்லது வெல்லம் கலந்து பருகலாம். ( சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை தவிர்க்கவும்) 


பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீரியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.