கோதுமை ரவை - இரண்டு கப், வெல்லம் -1/4 கிலோ, தேங்காய் - 1, நெய் - மூன்று டேபிள் ஸ்பூன், ஏலக்காய் -5, முந்திரி பருப்பு -10, உலர்ந்த திராட்சை -10, உப்பு - 1 சிட்டிகை, பச்சை கற்பூரம் - 1 சிட்டிகை, தண்ணீர் – தேவைக்கேற்ப. 


செய்முறை


கடாயை அடுப்பில் வைத்து, அதில் சிறிது நெய் சேர்த்து கோதுமை ரவையை அதில் சேர்த்து நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கோதுமை ரவை இல்லாதவர்கள் முழு கோதுமையை எடுத்து, கழுவி, காய வைத்து, மிக்ஸியில் சேர்த்து  கொரகொரப்பாக அரைத்து பயன்படுத்தலாம்.


கோதுமை ரவை நன்றாக வறுபட்ட உடன் தண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து, கோதுமை ரவை நன்றாக குழையும் அளவிற்கு வேகவிட வேண்டும். பிறகு வெல்லத்தை உடைத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து அந்த வெல்லம் கரையும் வரை வேக விட்டு, ஒரு பாத்திரத்தில் வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


கோதுமை ரவை நன்றாக வெந்த பிறகு அதில் வெல்லக் கரைசலை சேர்க்க வேண்டும். பின் தேங்காயை ஓரிரு முறை நன்றாக அரைத்து எடுத்து நன்றாக பிழிந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


வெல்லம் சேர்த்த கோதுமை ரவையில் இப்போது தேங்காய் பாலை ஊற்ற வேண்டும். ஒரு கொதி வந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி வைக்க வேண்டும்.


ஒரு கடாயை எடுத்து அதில் மீதம் இருக்கும் நெய்யை ஊற்றி, நெய் சூடானதும் முந்திரி, திராட்சை போன்றவற்றை சேர்த்து, அவற்றை பொன்னிறமாக வறுக்க வேண்டும். இவற்றை நெய்யுடன் பாயசத்தில் சேர்க்க வேண்டும். பிறகு ஏலக்காயை தட்டி அதில் சேர்க்க வேண்டும். பிறகு பச்சைக் கற்பூரத்தையும் அதில் சேர்க்க வேண்டும். இப்போது சுவையான சத்தான கோதுமை பாயசம் தயாராகி விட்டது. 


மேலும் படிக்க 


Rain Alert: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்களில்?


CM Stalin: "ஒவ்வொரு மாதமும் மக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுங்கள்" - ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அட்வைஸ்!