நமக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை நாம் உண்ணும் உணவுகள் மூலம் உடலுக்கு நாமே வழங்குவது உடல் நலத்திற்கு மிகவும் தேவையானதாகும். அதிக வைட்டமின்கள் கொண்ட, காய்கறிகள் மற்றும் பழங்களை நம் உணவில் சேர்ப்பது எவ்வளவு முக்கியம் என்பதை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் நம் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும், புத்துணர்ச்சியூட்டவும், நாம் பழச்சாறுகளை விரும்பி தேர்ந்தெடுக்கிறோம். இந்த பழச்சாறுகள் நமது உடல் இயக்கங்களை மீட்டெடுத்து புத்துயிர் அளிக்கின்றன, நமது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மேலும் இவை பல நோய்களைத் தடுக்கின்றன. அப்படி குறிப்பாக, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றவும் ஐந்து பச்சை சாறுகள் உள்ளன அவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
- கீரை சாறு
கீரை சாறு பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தது. இதில் இரும்புச்சத்து நிரம்பியிருப்பதால், இரத்த சோகையை போக்க உதவுகிறது. இதில் லுடீன் என்ற கரோட்டினாய்டு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும். மேலும் செரிமானத்தை தாமதப்படுத்துவதால், இது உடலில் சர்க்கரை விரைவாக உடைக்கப்படாமல் வைக்க உதவுகிறது. இதன் விளைவாக இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது.
- கற்றாழை சாறு
கற்றாழை பற்பல மருத்துவ நன்மைகள் நிறைந்த மூலிகை ஆகும். குறிப்பாக வைட்டமின் சி மற்றும் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்திருப்பதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்து. இது ஆக்ஸிஜனேற்றத்தின் அழுத்தத்தைக் குறைத்து, இரத்த சர்க்கரையை குறைக்கிறது. கூடுதலாக செரிமான அமைப்பின் செயல்பாட்டையும் சீராக்குகிறது.
- சுரைக்காய் சாறு
சுரைக்காய் பல அற்புதமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியது. இதில் அதிக அளவு நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து உள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கும், சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் நல்லது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ள நிலையில், இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால், நீரிழிவு நோயை அதிகரிக்க உதவும் இரத்த சர்க்கரை அளவு விரைவாக அதிகரிப்பதை தடுக்கும்.
- முருங்கை சாறு
முருங்கை சாறு ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு ஒரு அற்புதமான துணையாக உள்ளது, ஏனெனில் இது பல முக்கிய ஊட்டச்சத்துக்களின் பொக்கிஷமாகும். பல நோய்களுக்கு எதிராக போராட உதவும் இதன் சாற்றில் உள்ள உயிர்வேதியியல் பொருட்கள் நீரிழிவு எதிர்ப்பு விளைவைக் கொண்டிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
- பாகற்காய் சாறு
கசப்புச் சுவையுடன் இருந்தாலும், பாகற்காய் ஒரு சிறந்த உணவாகும். இரத்த சர்க்கரை அளவை திறம்பட கட்டுப்படுத்தும் திறனுக்காக இது பரவலாக அறியப்படுகிறது. இதில் சரண்டைன் என்ற கலவை உள்ளது, இது உடலில் இரத்த குளுக்கோஸைக் குறைக்க உதவுகிறது. இதில் பாலிபெப்டைட்-பி அல்லது பி-இன்சுலின் எனப்படும் இன்சுலின் போன்ற கலவை உள்ளது, இது இயற்கையாகவே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.