தமிழகத்தை பொறுத்தவரை பால் சார்ந்த பொருட்கள் இல்லாமல் மக்களால் ஒரு நாளை கடந்து செல்ல முடியாது. டீ, காபி, பால், வெண்ணெய் மற்றும் நெய் என ஏதாவது ஒரு வகையில் பால் சார்ந்த பொருட்கள் தமிழக மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்து இருக்கிறது
அந்த வகையில் வெண்ணெய் மற்றும் நெய்யினால் கிடைக்கக்கூடிய ஆகச்சிறந்த நன்மைகளை காண்போம். செரிமான பிரச்சினை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சினையில் இருந்து விடுபடலாம்.
நெய்யானது வெள்ளை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறம் வரையிலும் அதன் தன்மைக்கு ஏற்ப காணப்படுகிறது. நெய்யில் 8% எளிதாக ஜீரணமாக கூடிய கொழுப்பு அமிலங்கள் இருக்கிறது. இவ்வமிலங்கள் உண்ணத்தக்க கொழுப்புகள் ஆகும். நெய் மற்றும் மீன் எண்ணெயை தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இத்தகைய கொழுப்புகள் இல்லை. நெய் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் - ஏ, பி12, டி, ஈ மற்றும் கே மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதால், உடலுக்கு பல நன்மைகளை தருகிறது.
அதுமட்டுமல்லாமல் நன்கு சுத்தமான பசும் நெய்யை தொடர்ந்து உட்கொண்டால் ,உடல் சூடு தணிந்து
குடல் நோய்கள், கண் எரிச்சல், தோல் வறட்சி, முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் படிப்படியாகச் சரியாகிவிடும் என கூறப்படுகிறது.
உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய்படாமல் இருப்பார்கள்.
செரிமான பிரச்சினை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சினையில் இருந்து விடுபடலாம்
உடலுக்கு உள்ளே மட்டுமல்லாமல் உடலுக்கு வெளியே தோலில் ஏற்படும் பல பிரச்சினைகளை சரி செய்வதோடு, அழகு சாதன பொருளாகவும் பயன்படுகிறது. சருமத்தை மென்மையாகவும் ஈரப்பதமாகவும் மாற்றுகிறது. இயற்கையான பிரகாசத்தை தோலுக்கு அளிக்கிறது.
கரும்புள்ளிகளை சரி செய்கிறது கண்களுக்கு கீழே இருக்கும் கருவளையத்தை போக்குகிறது. வறண்ட மற்றும் சேதமடைந்த சருமத்தை சரிசெய்து, உதடுகள் வெடிப்பதைத் தடுக்கிறது. ஏதேனும் காயங்கள் ஏற்பட்டால் அதன் மீது நெய்யை தடவும் போது சிறிய காயங்களை இது குணப்படுத்துகிறது. இதே போல
கண்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
நெய்யை வீட்டில் இருக்கும் சில பொருட்களோடு கலந்து சருமத்தில் பயன்படுத்தும்போது நிறைய பலன்களை தருகிறது.
நெய், கடலை மாவு மற்றும் மஞ்சள் கலவை:
நெய்யுடன் மஞ்சள் மற்றும் கடலை மாவை சரியான அளவில் கலந்து முகம் மற்றும் கை கால்களில் பூசி அரை மணித்தியாலங்கள் கழித்து இளம் சூடான நீரில் கழுவி வர வேண்டும், இவ்வாறு தொடர்ந்து செய்யும்போது மென்மையாகவும் சிறிதாக எண்ணெய் பசையுடன் கூடிய சருமத்தை பெற முடியும். இதனால் வறண்ட சருமத்தில் வெடிப்புகள் தோன்றுவது, போன்ற பிரச்சினைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.
நெய் மற்றும் கற்றாழை சாறு:
தோலில், குறிப்பாக முழங்கைகள், முழங்கால்கள், கணுக்கால் மற்றும் கைகளில் நெய் மற்றும் கற்றாழை சாற்றை சமமாக கலந்து பூசி,அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு கழுவ வேண்டும். வறட்சியின் காரணமாக சருமம் வெண்மையாகவோ அல்லது செதில்களாகவோ மாறினால், இந்த செய்முறையானது,சருமத்தை ஈரப்பதமாகவும் வைத்திருக்கும்.
இவ்வாறு நெய்யானது உணவுப் பொருளாகவும் சருமத்தை பாதுகாக்கும் அழகு சாதனப் பொருளாகவும் பயன்படுகிறது.
நெய் , கடலை மாவு, பால் , சர்க்கரை:
கடலை மாவு நெய், பால், சர்க்கரை, போன்ற பொருட்களை நன்றாக பதத்துக்கு கலந்து கொண்டு, தோலில் வறண்ட பகுதிகளில் மெதுவாக வட்ட வடிவத்தில் மசாஜ் செய்ய வேண்டும். சர்க்கரை மற்றும் கடலை மாவு போன்றன சருமத்தில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும். அதே சமயம் நெய் மற்றும் பால், வறண்ட சருமத்தை சரிசெய்து, பளபளப்பைச் ஏற்படுத்துகிறது. இந்தப் பொருட்களைக் கொண்டு ஸ்கிரப் செய்வதன் மூலம் கரும்புள்ளிகள் முற்றிலுமாக தடுக்கப்படுகிறது. மேலும் முகம் ஈரப்பதத்துடன் பொலிவாக காட்சியளிக்கும்.
நெய் ,தயிர் , தேன் ,முட்டையின் வெள்ளைக்கரு:
முட்டையின் வெள்ளைக்கரு,தேன்,நெய் ,தயிர் இந்த பொருட்களை நன்றாக கலந்து, தலைமுடிக்கு தேய்த்துவர பல நன்மைகள் கிடைக்கும். இந்த கலவையை தலைமுடியில் தேய்த்து ,ஒரு மணி நேரம் கழித்து ஷாம்பு போட்டு நன்கு கழுவி முடியை உலர விட வேண்டும். இது தலைமுடிக்கு ஊட்டமளித்து, கூடுதல் பளபளப்பை சேர்க்கிறது. தயிர் முடியிலுள்ள பாக்டீரியாவை நீக்கி ஆரோக்கியத்தை வழங்குகிறது, தேன், முட்டை வெள்ளைக்கரு கூந்தலுக்கு நல்ல பளபளப்பையும் பொலிவையும், நெய் முடிக்கு ஈரப்பதத்தையும் தருகிறது.
நெய் , தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய்:
மென்மையான மற்றும் மிருதுவான சருமத்திற்கு தேங்காய் எண்ணெய், அல்லது பாதாம் எண்ணெய், போன்ற எண்ணெய்களில் ஏதேனும் ஒன்றோடு நெய்யை கலந்து உலர்ந்த கைகளில் தடவி வந்தால் தோல் மென்மையாகும். நெய் மற்றும் எண்ணெயின் இருப்பு தோலின் ஆழமான அடுக்குகளை ஊடுருவி உள்ளே ஈரப்பதத்தை ஏற்படுத்தி வறட்சியை நீக்கி பொலிவை கொடுக்கிறது.
.