இப்போது கிரீன் டீ குடிப்பது ஒரு பேஷன் என்றாலும் பலரும் இப்போது அதை தினசரி பருக ஆரம்பித்துவிட்டனர். இது ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தருகின்றன. ஃபாஸ்டிங் இரத்த குளுக்கோஸை கணிசமான அளவு குறைகிறது என்றாலும் அவை இரத்த இன்சுலின் அளவை பாதிக்கவில்லை என்பது HbA1c எனப்படும் ஹீமோகுளோபினுடன் இணைக்கப்பட்ட இரத்த சர்க்கரை (குளுக்கோஸ்) அளவை பரிசோதனை செய்யும் டெஸ்ட் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.


கிரீன் டீயானது கேமிலியா சினென்சிஸ் எனப்படும் ப்ரெஷ் இலைகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஆசிய நாடுகளில் இது முக்கியமான மருத்துவ பொருளாக விளங்குகிறது. இதில் வைட்டமின்கள், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், புரதம், தாதுக்கள், கார்போஹைட்ரேட்டுகள், ஃபிளாவனாய்டு போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன.





டைப் 2 நீரிழிவு நோய்க்கு தீர்வு:

கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளது. அவை தொப்பையை குறைப்பதோடு நீரிழிவு நோயைக் குறைப்பதிலும் பேரும் பங்கு வகிக்கின்றன. டைப் 2 நீரிழிவு உலகளவில் ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. 2045ஆம் ஆண்டில் மொத்தம் 693 மில்லியன் மக்கள் டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவார்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் குருட்டுத்தன்மை, பக்கவாதம், ஊனம், சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு மற்றும் முன்கூட்டியே இறப்பதற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.

சீனாவில் உள்ள ஹுவாஜோங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஒரு குழு அமைத்து அதன் மூலம் 2,194 பங்கேற்பாளர்களை வைத்து 27 ஆய்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆய்வின் முடிவில் கிரீன் டீ ஃபாஸ்டிங் குளுக்கோஸ் அளவை கணிசமான அளவு குறைந்துள்ளதாக முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் சர்க்கரை நோயின் பாதிப்பையும் மோசமடையாமல் தடுக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




க்ரீன் டீயில் உள்ள பாலிபினால்கள் மற்றும் பாலிசாக்கரைடுகளின் எனப்படும் இரண்டு ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. எனவே அவை சர்க்கரையின் அளவை நிர்வகிப்பது மட்டுமின்றி உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பையும் கரைக்க கூடியது.

அளவோடு குடித்தால் அளவில்லா நன்மை:

கிரீன் டீ உடலுக்கு நன்மையளிக்கும் என்றாலும் அதில் குறைந்த அளவிலான காஃபின் இருப்பதால் கவனத்துடன் எடுத்து கொள்ளவும். இரண்டு அல்லது மூன்று கப் கிரீன் டீ அருந்துவது போதுமானது. கிரீன் டீயின் அதிகபட்ச நன்மையை அடைய விரும்புவார்கள் சர்க்கரை சேர்க்காமல் அருந்தலாம். சுவையை மேம்படுத்த சிறிது எலுமிச்சை சாறு மற்றும் புதினா இலை சேர்த்து கொள்ளலாம்.  அதிக நேரம் கொதிக்க வைத்தால் டீ கசப்பாகிவிடும்.