Simple Banana Recipes: மா பலா வாழை என முக்கனிகளில் குறிப்பிடப்படும் வாழைப்பழத்தை கொண்டு வீடுகளில் சுவையான உணவுகளை தயாரிக்கலாம். பொதுவாக நமது வீடுகளில் வாழைக்காயை கொண்டு வருவல் கூட்டு மற்றும் சாம்பாரில் பயன்படுத்துவார்கள் மேலும் கார குழம்பு வைப்பதற்கு பயன்படுத்துவார்கள். ஆனால் இனிப்பாக இருக்கும் வாழைப்பழத்தை வைத்து எவ்வாறு நாம் சமைப்பது என்பதை பின்வரும் கட்டுரையில் காணலாம்


கேரளத்து சமையலான பழம்பொரி:


கேரள மக்களின் மிக விருப்பமான உணவான இந்த பழம்பொரி செய்வது மிகவும் எளிதானது. இதற்கு நேந்திரம் பழம் வேண்டும். மேலும் அவித்த அவல் இருந்தால் கூடுதல் சிறப்பு. முதலில் பஜ்ஜி மாவு செய்வதற்காக  கடலை மாவு மற்றும் சிறிதளவு அரிசி மாவு,காரத்திற்கு சிறிதளவு மிளகாய் தூள்,மற்றும் இஞ்சி பூண்டு விழுது,என அனைத்தையும் ஓரளவுக்கு கட்டியாக பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு நேந்திரம் பழத்தை குறுக்குப் பக்கத்தில் பாதியாக அறுத்து, அதன் உள்ளே அவலை வைக்க வேண்டும். பின்னர் இந்த பழத்தை, ஏற்கனவே தயாராக வைத்திருக்கும் கடலை மாவு கலவையில் முழுவதுமாக முக்கி எடுத்து, எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவை மிகுந்த பழம் பொறி தயார்.


வாழைப்பழ சமோசா:


பொதுவாக சமோசாவிற்கு உள்ளே வைக்கும் மசாலாக்களை பொருத்து, சமோசாவின் பெயர் மாறுபடுகிறது. பழமையான சமோசாக்களில், வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு அல்லது மேகி அல்லது தற்சமயம் புதிதாக வந்திருக்கும் சாக்லேட் என நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் துண்டு,துண்டாக நறுக்கிய வாழைப்பழத்தை, சமோசாவின் உட்புற வைத்து, பொரித்து எடுத்தால்,சுவை மிகுந்த வாழைப்பழ சமோசா தயாராகிவிடும். மக்னீசியம் நிறைந்து காணப்படும் இந்த வாழைப்பழ சமோசாவை, வாழைப்பழம் விரும்பாத குழந்தைகளுக்கும் கொடுத்து, சாப்பிட வைத்து,வாழைப்பழத்தின் நன்மைகளை அவர்களுக்கு அளிக்கலாம்.


வாழைப்பழ சிப்ஸ்:


பாரம்பரியமான வாழைப்பழ சிப்ஸ் செய்வதற்கு,நேந்திரம் பழம் மிகச் சிறந்ததாக இருக்கும். ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்துக்கொண்டு, அதை நன்றாக சூடாக்கிக் கொள்ள வேண்டும். பின்னர் தோல் நீக்கிய நேந்திரம் பழத்தை,சிப்ஸ் பதத்திற்கு,சீவி எண்ணெயில் பொரித்து எடுத்தால், தேங்காய் எண்ணெய் வாசம் கமழும், நேந்திரம் பழ சிப்ஸ் தயாராகிவிடும்.


வாழைப்பழ பஜ்ஜி :


வளமையாக போடும் வாழைக்காய் மற்றும் வெங்காய பஜ்ஜி போன்று, கடலை மாவை தயார் செய்து கொண்டு,வாழைப்பழத்தை குறுக்கு வாக்கில் மூன்று துண்டுகளாக, மெலிதாகவும் இல்லாமல், தடிமனாகவும் இல்லாமல், வெட்டி எடுத்துக்கொண்டு, ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக, மாவு கலவையில் இட்டு,எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவை மிகுந்த வாழைப்பழ பஜ்ஜி தயாராகிவிடும்.


வாழைப்பழ கேக்:


நீங்கள் வழக்கமாக செய்யும் கேக் மாவுடன்,நன்றாக அரைத்து கூழ் செய்யப்பட்ட,வாழைப்பழ கலவையை, நன்றாக கலந்து, அவனில் வைத்து, அவித்து எடுத்தால்,சுவை மிகுந்த வாழைப்பழ கேக் தயாராகிவிடும்.இது டீயுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும்.


வாழைப்பழ புடிங்:


வழக்கமான புடிங் செய்ய பயன்படும் மாவை நன்றாக சூடு படுத்தி, அகண்ட பாத்திரத்தில் ஊற்றவும். பின்னர்,அதில் நறுக்கிய வாழைப்பழத் துண்டுகளை சமமாக, அனைத்து இடங்களிலும் இருக்கும்படி, அழுத்தி உள்ளே வைக்கவும். சூடு ஆரிய பிறகு, குளிர்பதன பெட்டியில் வைத்து ஒரு மணி நேரங்கள் கழித்து, பரிமாறவும். அருமையான வாழைப்பழ புடிங் தயாராகிவிடும் .