யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். உடல் பியூரின் எனும் சேர்மத்தை உடைக்கும்போது இந்த அமிலம் உருவாகிறது. இதில் பெரும்பாலானவை சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். ஆனால் அதிக பியூரின் உள்ள உணவுகள் மற்றும் பானங்கள் யூரிக் அமிலத்தின் அளவுகளை அதிகரிக்கின்றன


பொதுவாக ஆண்களில் 3.4-7.0 மி.கி யூரிக் அமிலமும், பெண்களில் 2.4-6.0 மி.கி. அளவும் பாதுகாப்பான அளவாகும். 


உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால் மூட்டு வலி, நிற்பதில் சிரமம், விரல்களில் வீக்கம், மூட்டுகளில் வீக்கம் மற்றும் கால் மற்றும் விரல்களில் கூச்ச உணர்வு, சோர்வு ஆகியவை ஏற்படுகின்றன. சிறுநீரகங்கள் உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்ற முடியாமல் போகும்போது யூரிக் அமிலத்தின் அளவு அடிக்கடி உயரும். சிறுநீரகங்கள் யூரிக் அமிலத்தை அகற்ற முடியாமல் போகும் காரணிகளில், அதிகப்படியான உணவு, அதிக எடை, நீரிழிவு, டையூரிடிக்ஸ் எடுத்துக்கொள்வது மற்றும் அதிக மது அருந்துதல் ஆகியவை அடங்கும். யூரிக் அமில அளவு அதிகரிப்பது பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. இந்த நோய்களில் முக்கியமாக கீல்வாதம், இதய நோய், சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் அடங்கும்.


பூசணிக்காய்
பூசணிக்காயில் ஆன்ட்டி ஆக்சிடண்ட்ஸ் அதிகம். அதேபோல் வைட்டமின் சி, பீட்டா கரோட்டீன் மற்றும் லூட்டனின் உள்ளது. இவை உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும். பூசணிக்காய், உடலில் வளர்சிதை மாற்றத்தின் விகிதத்தை அதிகரித்து ப்யூரின் செரிமானத்தை ஊக்கப்படுத்தும்.
 


2. வெள்ளரி
வெள்ளரிப் பிஞ்சை சாப்பிடுவது என்பது உடலில் இருந்து ப்யூரினை வெளியேற்றும். வெள்ளரிப் பிஞ்சு நம் சிறுநீரகங்களில் இருந்து கற்களை வெளியேற்றவும் உதவும். உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்றும்.
 


3. கோவக்காய்
தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீர் அருந்துவது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைப்பது குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. கோவக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும் மேலும் யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும்


4. முள்ளங்கி
முள்ளங்கி சாப்பிடுவதால் உடலில் யூரிக் அமிலம் குறையும். முள்ளங்கியில் உள்ள பயோ ஆக்டிவ் காம்பவுண்ட் ப்யூரின் உடலில் சேர்வதைத் தடுக்கும். 


இதுதவிர ஆப்பிள் சைடர் வினிகர் ஒரு இயற்கையான சுத்தப்படுத்தி மற்றும் நச்சு நீக்கியாகும். இது உடலில் இருந்து யூரிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது. இதில் உள்ள அமிலம் யூரிக் அமிலத்தை உடைக்கும் வேலையை செய்கிறது.  1 டீஸ்பூன் ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கரைக்கவும். இப்போது இந்த கரைசலை ஒரு நாளைக்கு 2-3 முறை குடிக்கவும். யூரிக் அமிலம் கட்டுக்குள் வரும் வரை இதை தொடர்ந்து செய்யவும்.