ஆரோக்கியமான காலை உணவை எளிதாக செய்ய வேண்டு என்பவர்களுக்கு வெள்ளரிக்காய் அவல் ரெசிபி இதோ.


என்னென்ன தேவை?


அவல் - ஒரு கப்


துருவிய வெள்ளரிக்காய்- ஒரு கப்


துருவிய தேங்காய் - 1/4 கப் 


தாளிக்க..


எண்ணெய் - தேவையான அளவு


நிலக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்


கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்


உளுந்து பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்


இஞ்சி துருவியது - 1 டேபிள் ஸ்பூன்


பச்சை மிளகாய் - 2 


கடுகு - ஒரு டீ ஸ்பூன்


கருவேப்பிலை - தேவையான அளவு


உப்பு - தேவையான அளவு


செய்முறை:


சிவப்பு அவல் பயன்படுத்து பரிந்துரைக்கப்படுகிறது. தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்த அவலை ஊறவைத்து வடிகட்டவும். வெள்ளரிக்காயை தோல் நீக்கி துருவி எடுக்கவும். தேங்காய் துருவி வைக்கவும். 


இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும். கடுகு சேர்த்து நன்றாக வெடித்ததும், இஞ்சி, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்க்கவும். அடுத்து, கடலை பருப்பு, நிலக்கடலை, உளுந்து ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது அவல், துருவிய வெள்ளரிக்காய், தேங்காய் சேர்க்கவும். உப்பு சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வெள்ளரிக்காய் அவல் உப்புமா தயார். தயிர் உடன் சாப்பிடலாம். 






பட்டாணி அவல் உப்புமா செய்ய தேவையான பொருட்கள்: 


அவல் - 1 கப்


வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது )


வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கப்


வேகவைத்த உருளைக் கிழங்கு - 2 


கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு


தாளிக்க:


கடுகு - 1/2 டீஸ்பூன்


பச்சை மிளகாய் - 4


மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை


கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு


எண்ணெய் - ஒரு டீஸ்பூன்


உப்பு - தேவையான அளவு


எலுமிச்சை சாறு - தேவையான அளவு (எலுமிச்சை பழம் தேவையில்லையெனில் சேர்க்க வேண்டாம்.)



செய்முறை: 


அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அவலை பாலிலும் ஊற வைக்கலாம். சுவையாக இருக்கும். சிறிது நேரம் கழித்து அவலை வடிக்கட்டவும்.கொத்தமல்லியை பச்சை மிளகாயுடன் சேர்த்தி மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பச்சை மிளகாய், மஞ்சள் தூள் கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து கொள்ளவும். அதனுடன்  வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதோடு கொத்தமல்லி விழுதைச் சேர்க்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும். 


நன்றாக வதங்கிய பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி மற்றும் உருளைக் கிழங்கை சேர்க்கவும். நன்கு வதக்கிய பின்,  அவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள். பிறகு, கொத்தமல்லி இலைகள் மேலே தூவி இறக்கவும். சுவை கொத்தமல்லி, பட்டாணி அவல் ரெடி!


அவல்  மிக எளிமையாக  செரிமானம் ஆக கூடிய குறைந்த கலோரி அதிக நார்சத்து கொண்ட  உணவு.இது எடுத்து கொள்வதால், உடல்  எடை அதிகமாகாமல்  இருக்கும். உடல் எடை குறைப்பதில்  முக்கிய பங்கு வகிக்கிறது.  மேலும் நீரிழிவு நோயாளிகள் இதை ஒரு காலை அல்லது இரவு உணவில் சேர்த்து கொள்ளலாம். 


இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். எப்போதும், இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்து போய் இருப்பவர்களுக்கு இந்த அவல் உணவு சிறந்த மாற்றாக இருக்கும். அவல் உப்புமா, அவல் பாயசம், அவல் பொங்கல் போன்ற உணவுகளை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு அவல் லட்டு, அவல் புட்டு போன்றவை கொடுக்கலாம். இது ஆரோக்கியமான உணவாகவும், குழந்தைகள் எடுத்து கொள்வதால், ஊட்டச்சத்து மிக்கதாகவும் இருக்கும்.