சோர்வாக உணரும்போதோ, மன அழுத்தம் ஏற்படும்போதோ, வேலைகள் செய்து களைத்து போகும்போதோ, காபி குடித்து இளைப்பாறுவது உலக வழக்கம். அதிலும் உடல் எடையை குறைப்பவர்கள், டயட்டில் இருப்பவர்கள் பால் சேர்க்காமல் அருந்த விரும்புவார்கள். பலருக்கு அது மனதிற்கு இதமாகவும் அமையும். பலர் கூறுவது போலவே பிளாக் காபியில் பல நன்மைகள் இருந்தாலும், பின் விளைவுகளும் உள்ளன என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றன்ர்.


குடல் ஆரோக்கியம்


பிளாக் காபியை தினமும் உட்கொள்வது உங்கள் குடலில் ஆரோக்கியமான மைக்கோபாக்டீரியத்தை அதிகரிக்கலாம், ஆனால் அதிகப்படியான காஃபின் உட்கொள்வது இந்த நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றும். இது குடல் ஆரோக்கியத்தை மோசமாக்கும். மேலும் உடல் அதிக ஊட்டச்சத்துக்களை ஏற்காமல் வெளியேற்ற செய்துவிடும். கூடுதலாக, அமிலத்தன்மை, பசியின்மை, நெஞ்செரிச்சல் மற்றும் வாய்வு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.


நீரிழப்பு


காஃபினில் உள்ள மெத்தில்க் சாந்தைன் உங்கள் உடலில் ஒரு டையூரிடிக் விளைவை ஊக்குவிக்கிறது. எனவே, அதிகப்படியான காபி உட்கொள்வது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும், மேலும் நீரிழப்பு ஹைபோகலீமியா, தலைச்சுற்றல், தலைவலி, மற்றும் பாலிடிப்சியாவை ஏற்படுத்துகிறது. எனவே, நீரிழப்பைச் சமன் செய்ய கூடுதலாக ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.



தூக்கத்தை கெடுக்கும்


பிளாக் காபி குடிப்பது உங்கள் இயற்கையான தூக்கத்தை பாதிக்கலாம். நல்ல தூக்கத்திற்கு காரணமான அடினோசின் ஏற்பிகளை காஃபின் தடுக்கிறது. இது அதிகநேரம் விழித்திருக்கச் செய்கிறது. அதனால்தான் வேலை, அலுவலகம் அல்லது படிக்கும் நேரத்தின் போது பலர் காபி குடிக்கின்றனர். 


ஊட்டச்சத்துக்களை தடுத்தல்


காஃபினின் சில தாதுக்கள், துத்தநாகம், தாமிரம், மாங்கனீசு, கால்சியம் மற்றும் ரெட்டினோல் உறிஞ்சுதலைத் தடுக்கலாம். காஃபின் இவற்றை தடுப்பதால், கர்ப்பிணிகள், 40 வயதுக்கு மேற்பட்ட பாலூட்டும் பெண்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்புக்குள்ளான பெண்களுக்கு காஃபின் நல்லதல்ல.


தொடர்புடைய செய்திகள்: Watch Video: “உங்களை பார்க்கணும்ன்னு தோணுச்சு.. அதான் வந்தேன்”.. விஜய் சேதுபதியை சந்தித்த குழந்தை..வைரலாகும் வீடியோ..!


தவிர்க்க வேண்டியவர்கள்


கர்ப்பமாக இருப்பவர்கள், பாலூட்டுபவர்கள், அமில வயிற்று நோய், GERD, அமிலத்தன்மை, இரத்த சோகை, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் தொடர்புடைய விஷயங்கள் கொண்டவர்கள் காபியை தவிர்க்கலாம்.


ஹார்மோன்களுடனான தொடர்பு


காஃபின் உடலில் உள்ள நரம்பியக்கடத்திகளான டோபமைனைத் தூண்டுகிறது, இது தற்காலிகமாக புத்துணர்ச்சியாக உணர வைத்தாலும், பின்னர் மீண்டும் மீண்டும் காபியைச் சார்ந்திருக்கும் நிலையை அடைய செய்து அடிமையாக்கும் திறன் கொண்டது.



மன அழுத்தம்


நாம் எந்த வகையான மன அழுத்தத்தில் இருந்தாலும் காபியை வைத்து சரி செய்துவிடலாம் என்னும் மன நிலையில் இருக்கிறோம். காபிக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்ற பெயரையும் கொடுத்து இன்னும் அதிகமாக அதனை ரொமான்டிசைஸ் செய்கிறோம். ஆனால் இந்த காஃபின் மனா அழுத்தத்தை நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக அதிக மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?



  • ஏனெனில் காபி அடினோசினின் கட்டுப்பாட்டை தடுக்கிறது. அடினோசின் என்பது மனித உயிரணுக்களில் உள்ள ஒரு நியூக்ளியோடைடு ஆகும், இது உடலில் ஒரு இனிமையான விளைவை அளிக்கிறது. 

  • காபி நல்ல ஹார்மோன்களைத் தடுக்கிறது மற்றும் கார்டிசோலை (மன அழுத்த ஹார்மோன்) மோசமாக்குகிறது. அதிகரித்த கார்டிசோல் அளவுகள் கூடுதல் உடல் பவுண்டுகள், இதய நோய், டிஸ்லிபிடெமியா மற்றும் அதிகரித்த இரத்த சர்க்கரை போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

  • காஃபின் உடலில் அட்ரினலின் சுரப்பைத் தூண்டுகிறது, இது ஆற்றல் உயர்வை அளித்தாலும் மறுபுறம், இது மிகவும் சோர்வடையச் செய்கிறது. கூடுதலாக, ஒரு நாளில் 400 (mg) க்கும் அதிகமான காஃபின் உட்கொண்டால், அதாவது 4 கப் காபி குடித்தால் எரிச்சல், பதட்டம் மற்றும் தூக்கமின்மை, நடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.