அரைக்கத் தேவையான பொருட்கள் 


சோம்பு – 1 ஸ்பூன்,மிளகு – அரை ஸ்பூன், கசகசா – 1 ஸ்பூன், சீரகம் - ஒரு ஸ்பூன், பட்டை – 3, கிராம்பு – 6, ஸ்டார் சோம்பு – 2, பிரியாணி இலை – 3 சிறியது, வர மிளகாய் – 10, வர கொத்தமல்லி – 2 ஸ்பூன், ஏலக்காய் – 1, தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன். (துருவியது)


 




செட்டிநாடு சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்


சிக்கன் – ஒன்றரை கிலோ, சோம்பு – 1 ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், தக்காளி – 4, பெரிய வெங்காயம் – 4, இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன், கரம் மசாலா – ஒரு ஸ்பூன், கறிவேப்பிலை – 4 கொத்து, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், கசூரி மேத்தி – 2 ஸ்பூன், சோம்பு – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. 





 




செய்முறை


அரைக்க கொடுக்கப்பட்டுள்ள மசாலா பொருட்கள் அனைத்தையும் வெறும் கடாயில் நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பொருட்கள் தீயாமல் பக்குவமாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். 








இப்போது கடாயில் தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து ஆற வைக்க வேண்டும். பின் மிக்ஸி ஜாரில்  தேங்காய் உள்ளிட்ட மசாலா பொருட்களை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.





ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், ஒரு ஸ்பூன் சோம்பு சேர்த்து தாளித்து, பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும், அதனுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.








இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு , கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.








இப்போது வெட்டி சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து மூடி வைக்க வேண்டும். சிக்கனில் இருந்து வரும் தண்ணீரிலேயே சிக்கன் நன்றாக வேகும்.








5 நிமிடத்திற்கு பிறகு அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து  மூடிவைத்து கொதிக்க விடவேண்டும். இப்போது கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வேகவிடவேண்டும்.


சிக்கன் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும். இப்போது 2 ஸ்பூன் கசூரி மேத்தியை இதில் சேர்க்க வேண்டும். பின் சிக்கனை கிளறி இறக்கினால் சுவையான செட்நாடு சிக்கன் தயார்.