சீஸ் பிடிக்கும் என்பவர்கள் காய்கறிகள் வைத்து செய்யும் சீஸ் வெஜ் ஸ்டிக்ஸ் ஸ்நாக்ஸை செய்து சாப்பிடலாம். புதிய உணவாகவும் இருக்கும். 


சீஸ் வெஜ் ஸ்டிக்ஸ்


என்னென்ன தேவை?


அவல் - 150 கிராம்


தண்ணீர்  - தேவையான அளவு


வேகவைத்த உருளைக்கிழங்கு - ஒரு கப்


வெங்காய்ம் - 100 கி


குடைமிளகாய் - 65 கிராம்


கேரட் - 65 கி


பூண்டு - சிறிதளவு


பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன்


கொத்தமல்லி தூள் -ஒரு டேபிள்ஸ்பூன்


சீரக தூள் - 1 டீஸ்பூன்


சாட் மசாலா - 1 டீஸ்பூன்


மிளகுத் தூள் - 1 ஸ்பூன்


அரிசி மாவு - 50 கிராம்


சீஸ் க்யூப்ஸ் - 200 கிராம்


கார்ன்ஃப்ளார் - 150 கிராம்


உப்பு - தேவையான அளவு


பாப்ரிக்கா - 1/2 டீஸ்பூன்


பிரெட் க்ரம்ஸ் - 200 கிராம்


எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.


செய்முறை


அவலை நன்றா சுத்தம் செய்துவிட்டு, அதை தண்ணீரில் 5 நிமிடங்கள் ஊற வைத்து வடிக்கட்டி எடுக்க வேண்டும்.  ஒரு பாத்திரத்தில், 580 கிராம் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்றாக மசிக்க வேண்டும். இதோடு, ஊற வைத்த அவல், நறுக்கிய வெங்காயம், கேரட், மிளகுத்தூள்,  கேரட், பூண்டு விழுது, பச்சைமிளகாய், உப்பு, சிவப்பு மிளகாய் தூள், மல்லி தூள் சேர்க்கவும். இதோடு, சீரகத்தூள், சாட் மசாலா, மிளகுத் தூள், அரிசி மாவு சேர்த்து நன்றாக கலக்கவும். 


சீஸை துண்டுகளாக நறுக்கவும். பாப்சிகல் குச்சியை எடுத்து அதை சீஸ் க்யூப்களுக்கு நடுவே வைக்க வேண்டும். வெஜ் ஸ்டபிங்கை கைகளால் சிறிது உருண்டையாக எடுத்து சீஸ், பாப்சிகல் குச்சியில் உருண்டையாக வரும்படி வைக்கவும். 


இப்போது, ​​இதை ஒரு தட்டில் வைத்து 20 - 30 நிமிடங்கள் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.  ஒரு பாத்திரத்தில் 150 கிராம் மைதா அல்லது கார்ன் மாவு, 1/2 டீஸ்பூன் உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.தேவையான அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அடுத்து,  ஒரு பாத்திரத்தில், 200 கிராம் பிரட் துண்டுகள், 1/2 தேக்கரண்டி மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். இதையும் தனியே வைக்கவும். இப்போது வெஜ் ஸ்டிக்ஸை ஒவ்வொன்றாக மாவு கலவையில் தோய்து எடுத்து அதை பிரெட் க்ரம்சில் ரோல் செய்து தனியாக ஒரு தட்டில் வைக்கவும்.   


எல்லாம் தயாராகிவிட்டது. இனி பொரித்து எடுப்பது மட்டுமே பாக்கி. கடாயில் போதுமான அளவு எண்ணெய் வைத்து நன்றாக சூடானதும் வெஜ் ஸ்டிக்கை அதில் போட்டு பொரித்து எடுக்கவும். சீஸ் வெஜ் ஸ்டிக்ஸ் தயார். இதை சாஸ் உடன் சேர்த்து சாப்பிடலாம். 


எண்ணெய் நன்றாக சூடானதும் பொரிப்பது உணவில் அதிக எண்ணெய் இல்லாமல் இருக்க உதவும்.