அவல் லட்டு செய்முறை


சிவப்பு அவல் அல்லது வெள்ளை அவல் - 1/2 கிலோ


சர்க்கரை - 1 1/2 கப்


நெய் - ஒரு பெரிய கப்


முந்திரி - ஒரு கப்


ஏலக்காய் தூள் - சிறிதளவு


உலர் திராட்ச்சை - சிறிதளவு


பாதம்- சிறிதளவு


தேங்காய் - ஒரு கப் 


செய்முறை


பாதம், கருப்பு திராட்ச்சை என எதுவாக இருப்பினும் உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்து கொள்ளலாம்.


ஒரு கடாயில் மிதமான தீயில் நெய் சேர்த்து முந்திரி, உலர்ந்த பழங்களை வெறுத்தெடுக்க வேண்டும்.அதை தனியாக எடுத்து  வைத்து கொள்ள வேண்டும். அதே கடாயில், சிறிதளவு நெய் சேர்த்து சிகப்பு அவலை 2 அல்லது 3 நிமிடம் வறுக்க வேண்டும். நிறம் மாறாமல் வறுக்க வேண்டும். அப்போதான் லட்டு  சுவையாக இருக்கும். அவலை வறுத்து தனியே வைக்கவும். ஆறியதும் இதை மிக்ஸியில் நைஸாக இல்லாமல் அரைக்க வேண்டும்.


இனிப்பு சுவைக்காக, சர்க்கரையை மிக்சியில் பொடியாக அரைத்து வைக்க வேண்டும். இல்லையெனில் சர்க்கரையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்தில் சர்க்கரை பாகு காய்ச்சியெடுக்கலாம்.நெய்யில் துருவிய தேங்காயை சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும். 


ஒரு  பாத்திரத்தில் வறுத்த  அரைத்த அவல், தேங்காய், முந்திரி சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்து லட்டு போல பிடிக்கவும். இதில் சிறிதளவு பால் சேர்த்து கலவை சூடாக இருக்கும்போதே சிறிய லட்டுகளாக பிடிக்கவும். இப்போது சுவையான சிகப்பு அவல் லட்டு ரெடி. பால் சேர்த்தால் அதிக நாட்களுக்கு லட்டு இருக்காது. சர்க்கரை பாகு முறை என்றால் சிறிதளவு ரவாவில் ஊற்றி லட்டுக்களாக பிடிக்கவும். இதற்கு வெல்லமும் பயன்படுத்தலாம்.


பல வகையான  லட்டு ரெசிபி



  •  லட்டு விரும்பி சாப்பிடுபவர்கள் என்றால் பல வகையானவற்றை முயற்சி செய்யலாம்.

  •  லட்டு தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதிலாக மில்க்-மெய்ட் (MILKMAID) சேர்க்கலாம்.

  • லட்டில் உடைத்த பாதாம், பால் பவுடர் சேர்த்தும் செய்யலாம்.

  • சாக்கோ பவுடர், சாக்கோ சிப்ஸ் சேர்த்து சாக்லேட் ரவா, அவல் லட்டு தயாரிக்கலாம்.

  • ஹெல்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கேழ்வரகு, கம்பு மாவு சிறதளவு சேர்த்து கொள்ளலாம்.

  • இதோடு வறுத்த பூசணி விதை, சூரியகாந்தி விதைகள் சிறிதளவு பொடித்து சேர்க்கலாம்.

  • பேரீட்ச்சை பழம் சிறியதாக  நறுக்கி சேர்த்து லட்டுடன் சேர்க்கலாம்.

  • ரெண்டு நாட்களுக்கு பயன்படுத்திவிடுவீர்கள் என்றால் பால் சேர்க்கலாம். உடனே சாப்பிட்டுவிடும் சூழலில் மட்டும் பால், தேங்காய் சேர்த்து லட்டு தயாரிக்கவும்.