கேரட்டில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளதால் இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றலாம் என கூறப்படுகிறது. பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும் எனறு சொல்லப்படுகின்றது.


வைட்டமின் ஏ நம் உடலுக்கு அவசியமான மிக முக்கிய ஊட்டச்சத்து ஆகும். மனித உடலால் உருவாக்க முடியாத இந்த வைட்டமின் ஏ ஊட்டச்சத்தை நாம் உணவின் மூலம் மட்டுமே பெறமுடியும் என கூறப்படுகிறது. இந்த விட்டமின் ஏ சத்து கேரட்டில் நிறைந்துள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.  எனவே நாம் உணவில் கேரட்டை ஏதேனும்  ஒரு வகையில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதன் பயன்களை பெற முடியும். சிலருக்கு கேரட் பொரியல் பிடிக்காது அப்படிப்பட்டவர்கள் அதை ஜூசாக எடுத்துக் கொள்ளலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி குடிக்கக்கூடிய கேரட் மில் ஷேக் எப்படி தயாரிப்பதென்று பார்க்கலாம் வாங்க. 


தேவையான பொருட்கள்


துண்டுகளாக நறுக்கிய கேரட் - 3/4 கப்,  பாதாம் - 16 ,பால் - 2 கப் ,ஏலக்காய் பொடி - 2 சிட்டிகை, நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன் அல்லது சர்க்கரை


செய்முறை

முதலில் பாதாமை தண்ணீரில் போட்டு 4 மணிநேரம் ஊற வைத்து, பின் அதில் உள்ள தோலை நீக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து, நன்கு கொதித்ததும், சர்க்கரை சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் கேரட், பாதாம், ஏலக்காய் பொடி சேர்த்து, அடுப்பை அணைத்து விட வேண்டும். இந்த கலவையை நன்கு குளிர வைக்க வேண்டும். பிறகு பாலில் இருக்கும் பொருட்களை மிக்ஸியில் போட்டு, சிறிது பால் ஊற்றி நன்கு மென்மையாக அரைக்க வேண்டும். இறுதியில் மீதமுள்ள பாலை ஊற்றி ஒருமுறை மிக்சியில் இரண்டு சுற்று சுற்றி எடுத்து பரிமாறினால், சுவையான கேரட் மில்க் ஷேக் தயார்.

மேலும் படிக்க


Vanniyar Building Recovery: சென்னையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் & கட்டடம் மீட்பு - தமிழக அரசு அதிரடி


Crime: காலையிலேயே பயங்கரம்: வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள்; பத்திரிகையாளரை சரமாரியாக சுட்டுக் கொன்ற கொடூரம்...என்ன நடந்தது?