நீரிழிவு நோய் தற்காலத்தில் மிகவும் பொதுவான நோயாக எல்லோரும் கண்டிப்பாக அனுபவித்தே ஆகவேண்டிய நோயாக உருவெடுத்துள்ளது.


சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் (IDF) அறிக்கையின்படி, இது உலகெங்கிலும் உள்ள சுமார் 537 மில்லியன் மக்களை பாதிக்கும் ஒரு பெரிய உடல்நலப் பிரச்சனையாக உள்ளது. 2030 ஆம் ஆண்டில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 643 மில்லியனாகவும், 2045 ஆம் ஆண்டில் 783 மில்லியனாகவும் உயரும் என்று அறிக்கை மேலும் கணித்துள்ளது. இது உடலின் இன்சுலின் உற்பத்தி தொடர்பான பிரச்சனையால் வரும் நோயாகும். இந்த நோய்க்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், இதயநோய், சிறுநீரகக் கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.


மேலும் நமது நரம்புகளை பலவீனப்படுத்தலாம். சிகிச்சை அளித்தால் இதெல்லாம் நடக்காமல் தடுக்கலாமே தவிர, முற்றிலுமாக உடலில் அந்த பிரச்சனை இல்லாமல் செய்ய முடியாது என்று சுகாதார நிபுணர்கள் விளக்குகின்றனர். அதற்கு பதிலாக, ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை மூலம் அதை நிர்வகிக்கவும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் வேண்டும். அப்போதுதான் மீட்பராக வருகிறது ப்ரோக்கோலி. பென்சில்வேனியா ஸ்டேட் யுனிவர்சிட்டி நடத்திய புதிய ஆய்வில், ப்ரோக்கோலியை உணவில் சேர்த்துக்கொள்ளுதல், டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.



ப்ரோக்கோலியின் நன்மைகள்


ப்ரோக்கோலி ஒரு சூப்பர் ஃபுட் என்பதை இப்போது நாம் அனைவரும் அறிவோம். இது நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பயோஆக்டிவ் கலவைகள் ஆகியவற்றால் நிரம்பியுள்ளது, அவை நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கூடுதலாக, இதில் கலோரிகள் குறைவாகவும், மிகக் குறைந்த கிளைசெமிக் குறியீட்டையும் கொண்டிருப்பதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த உணவாக அமைகிறது. பென் ஸ்டேட்டின் சமீபத்திய ஆய்வில், ப்ரோக்கோலியில் ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து இருப்பதைக் கண்டறிந்துள்ளது. இது சிறுகுடலின் பின் புறத்தை பாதுகாக்கவும் நீரிழிவு உட்பட பல உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தடுக்கவும் உதவுகிறது. எலிகள் மீது நடத்தப்பட்ட இந்த ஆய்வு, 'laboratory investigation' இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்: IPL Points table: பூரான் அடித்த அடி, லக்னோ அபார வெற்றி.. மாற்றம் கண்ட ஐபிஎல் பாயிண்ட்ஸ் டேபிள்


ப்ரோக்கோலி எப்படி நீரிழிவு நோயைத் தடுக்கிறது


வயிற்றில் இருந்து வரும் உணவை வடிகட்டவும் மேலும் ஜீரணிக்கவும் சிறுகுடல் உதவுகிறது. சிறுகுடல் வடிகட்டியாக செயல்படுகிறது, இது நீர் மற்றும் நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் உடலுக்குள் செல்ல அனுமதிக்கிறது, உணவுத் துகள்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களைத் தடுக்கிறது. ஒரு ANI அறிக்கை, ப்ரோக்கோலியில் ஒரு வகை மூலக்கூறை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளதாக தெரிகிறது. அதுதான் அரில் ஹைட்ரோகார்பன் ரிசெப்டர் லிகண்ட்ஸ் எனப்படும் விஷயமாகும். இது சிறுகுடலில் உள்ள புரோட்டீன் அரில் ஹைட்ரோகார்பன் ஏற்பியுடன் (AHR) பிணைக்கிறது. "இந்த பிணைப்பு, குடல் உயிரணுக்களின் செயல்பாடுகளை பாதிக்கும் பல்வேறு செயல்பாடுகளைத் தொடங்குகிறது," என்று ஆய்வு கண்டறிந்துள்ளது. எனவே ப்ரோக்கோலி உடலுக்கு பெரும் நன்மையை கொண்டு வந்து சேர்ப்பதால் இனி பலர் அதனை உணவில் சேர்த்துக்கொள்ள முயற்சிப்பார்கள். அதற்கான முக்கியமான டிப்ஸ் இதோ:




  1. நன்றாக சுத்தம் செய்யுங்கள்


புதிய காய்கறிகளில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருக்கலாம், அது நம்மை நோய்வாய்ப்படுத்தும். எனவே, உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) கூற்றுப்படி, காய்கறிகளை உரிப்பது, நறுக்குவது அல்லது சமைப்பதற்கு முன் ஓடும் நீரில் நன்றாகக் கழுவ வேண்டும்.



  1. தண்டை அகற்ற வேண்டாம்


ப்ரோக்கோலியை வெட்டும்போது தண்டை தூக்கி எறிபவர்கள் எனில், இன்றே அதை நிறுத்துங்கள். ப்ரோக்கோலி தண்டுகள் நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன. நீங்கள் சமைக்கும்போது அதனையும் சேர்த்து பயன்படுத்தலாம்.



  1. ப்ரோக்கோலியை அதிக நேரம் சமைக்க வேண்டாம்


ப்ரோக்கோலியை அதிக நேரம் சமைத்தால், அது அதன் அனைத்து சத்துக்களையும் இழந்துவிடும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நீங்கள் விரும்பிய செய்முறையில் சேர்ப்பதற்கு முன் சிறிது நேரம் பச்சையாகவோ அல்லது ஆவியில் வேகவைத்தோ சாப்பிடலாம். அப்போதுதான், ப்ரோக்கோலியில் உள்ள நிறம், சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை அப்படியே இருக்கும்.



  1. பிற ஊட்டச்சத்துக்களுடன் ப்ரோக்கோலியை இணைக்கவும்


ப்ரோக்கோலி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒன்றுதான், ஆனால் மேலும் அதனை மற்ற ஆரோக்கியமான உணவுகளில் சேர்ப்பது மேலும் பலன்களை அதிகரிக்க உதவுகிறது. சாலட், சூப், வறுத்த காய்கறிகள் மற்றும் பலவற்றின் வடிவில் நீங்கள் அதை அனுபவிக்க முடியும்.



  1. நிதானம் முக்கியமானது


எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டிவ விஷயம், எதையும் அளவுக்கு அதிகமாகச் செய்வது உங்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். ப்ரோக்கோலியில் நார்ச்சத்து அதிகம்; எனவே, அதிக அளவு உட்கொள்வதால், அஜீரணம் மற்றும் உடலில் வீக்கம் ஏற்படலாம். எடுத்துக்கொள்ளும்போது குறைவாக எடுத்துக்கொள்ளலாம்.