ப்ரோக்கோலியில் நிறைய சத்துகள் இருப்பது நமக்கு தெரிந்ததுதான். ஊட்டச்சத்து மிகுந்த ப்ரோக்கோலியில் ரைஸ், புலாவ், பகோடா, ப்ரோக்கோலி தோசை என செய்வதுபோலவே, சூப் செய்து சாப்பிடுவது நல்லது. அதுவும் குளிர்காலம், மழைக்காலம் என்றால் சூப் வகைகள் சாப்பிடலாம்.


ப்ரோக்கோலி சூப் 


என்னென்ன தேவை?


ப்ரோக்கோலி - 1 


பூண்டு, இஞ்சி - சிறிய அளவு


ஊறவைத்த பாதாம் பருப்பு - ஒரு சிறிய கப்


உப்பு தேவையான அளவு


துருவிய பாதாம் - 2 டேபிள் ஸ்பூன்


எண்ணெய் -தேவையான அளவு


மிளகுத்தூள்- 2 ஸ்பூன்


செய்முறை


கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த பாதாம், ப்ரோக்கோலி, பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். கூடவே கொஞ்சம் தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விடவும். அதிகம் தண்ணீர் சேர்க்க வேண்டாம். ப்ரோக்கோலி நன்றாக வெந்ததும் ஆற வைக்கவும். ஆறிய ப்ரோக்கோலியை மிக்ஸி ஜாருக்கு மாற்றி அரைக்கவும். ரொம்பவும் நைஸாக அரைக்க வேண்டாம். அரைக்கும்போது தண்ணீர் சேர்க்க வேண்டாம். துருவிய பாதாமை எண்ணெய் வறுத்து எடுக்கவும். இப்போதோ அரைத்த ப்ரோக்கோலி சாற்றை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி அதில் பொரித்த பாதாமை சேர்த்து கொஞ்சம் சூடு செய்து மிளகு தூள், உப்பு சேர்க்கவும்.


ப்ரோக்கோலி சூப் ரெடி. இதோடு வால்நட், முந்திரி உள்ளிட்டவைகளையும் சேர்த்து இதே முறையில் சேர்க்கலாம். தேவையெனில், கொஞ்சம் ஃப்ரெஷ்ஷான க்ரீம், தேங்காய் பால் சேர்த்தும் சூப் அருந்தலாம். 


உடல் எடை மேலாண்மைக்கு ஏற்ற சூப்


தக்காளி சூப் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது - தக்காளியில் லைகோபீன் நிறைந்து இருக்கிறது.இது தக்காளிக்கு இயற்கையான நிறமியை தருகிறது. தக்காளி அழகான நிறத்தில் இருப்பதற்கு இதுதான் காரணம். இது உடல் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தை நடுநிலைப்படுத்துகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திகிறது.  இதில் இருக்கும் செலினியம் இரத்த ஓட்டம் சீராக நடப்பதற்கு உதவியாக இருக்கிறது. இரத்த சோகை வராமல் தடுக்கும். தக்காளி சூப் ஆலிவ் எண்ணையுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.


இது உடல் எடை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த தக்காளி சூப் அன்றாடம் எடுத்து கொள்வதால் உடல் எடை குறையும். வீட்டில் தக்காளி இருந்தால் 10-15 நிமிடங்கள் போதுமானது தக்காளி சூப் செய்வதற்கு சரியாக இருக்கும்.


கேரட், இஞ்சி கூட்டணி மிகவும் சுவையான ஆரோக்கியமான சூப் வகை. இஞ்சி செரிமானத்திற்கு உதவுகிறது. கேரட்டில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து உள்ளது, இது நல்ல செரிமான ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.


உங்களுக்கு கிவியின் இனிப்பு விருப்பம் என்றால், இந்த சூப் உங்களுக்கு பிடிக்கும்.  தேங்காய் க்ரீம், கிவி, பச்சை பருப்பு போன்றவற்றின் சுவையில்  இந்த சூப் உங்களை மயக்கும். விட்டமின் சி, நீர்ச்சத்துகொண்ட கிவி நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.ஆன்டிஆக்ஸிடன்ட்களிலும் நிறைந்துள்ளதால் நோய் மற்றும் அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது. உங்களுக்குப் பிடித்த சூப் செய்து சாப்பிடுங்க. குழந்தைகள் அதிகம் சாப்பிட அடம் பிடிக்கும் காய்கறிகளை சூப் செய்து கொடுக்கலாம்.