இனிப்பு பிரியர்களுக்கு லட்டு மிகவும் பிடிக்கும்.லட்டில் ரவா லட்டு, பூந்தி லட்டு, ரவா லட்டு என பல வகைகள் உள்ளன. இதில் ஒவ்வொரு வகையான லட்டும் ஒவ்வொரு சுவையில் இருக்கும்.  இந்த லட்டை குறைந்த நேரத்தில் சுவையாக தயாரிக்க முடியும். தற்போது நாம் சுவையான பூந்தி லட்டு எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். 


தேவையான பொருட்கள் 


கடலை மாவு – 1 1/4 கப்
சர்க்கரை – 1 1/2 கப்
தண்ணீர் – சர்க்கரை மூழ்கும் அளவு
குங்குமப்பூ – 5 – 10 இழை
கற்கண்டு – 1 டீ ஸ்பூன் (விருப்பமிருந்தால் சேர்த்துக் கொள்ளலாம்)
முந்திரி பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
உலர் திராட்சை – 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் – 4
நெய் – 1 டேபிள் ஸ்பூன்


செய்முறை


முதலில் கடலை மாவை சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவை கரைத்துக்கொள்ள வேண்டும். தோசை மாவு பதம் வருமாறு மாவை தயார் செய்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பூந்தி கரண்டியை எண்ணெய்க்கு சிறிது மேலே பிடித்துக்கொண்டு, ஒரு கரண்டி மாவு எடுத்து பூந்தி கரண்டியில் ஊற்ற வேண்டும். பூந்தி மொறு மொறுப்பாவதற்கு முன் எடுத்து விட வேண்டும். 


சர்க்கரை, குங்குமப்பூவை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
ஒரு கம்பி பதம் வந்தவுடன் மிதமான சூட்டிற்கு அடுப்பை மாற்றிவிடவும். பாகு கொஞ்சம் வெள்ளை நிறத்தில் உறைய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து விட வேண்டும்.


பொரித்து வைத்திருக்கும் பூந்தியை, பாகுடன் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். ஒரு சிறிய கடாயில், நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சையை பொன்னிறமாக வறுத்தெடுத்து அதை பூந்தி உடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். 


பின் ஏலக்காய் மற்றும் கற்கண்டை லேசாக இடித்து நொறுக்கி, பூந்தியுடன் சேர்த்து அனைத்தும் நன்றாக கலக்கும் வரை கிளறி ஆற விட வேண்டும்.


பூந்தி லேசான சூட்டில் இருக்கும் போது சிறிது பூந்தியை கையில் எடுத்து உருண்டையாக பிடிக்கவும். எல்லா பூந்தியையும் உருண்டையாக உருட்டி எடுத்து சுமார்  30 நிமிடம் அல்லது லட்டு உலரும் வரை வெளியில் வைத்திருக்க வேண்டும். அவ்வளவுதான் பூந்தி லட்டு தயார்.


மேலும் படிக்க 


Diwali 2023: களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்! உயர்ந்த கறி விலை, 12 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் - ஒரு ரவுண்டப்!


Diwali 2023: தீபாவளி ஸ்பெஷல்! அசத்தலான சுவையில் பிரபல கொரிய ஸ்வீட் - பிங்சு எப்படி செய்வது?