தேவையான பொருட்கள் 


கருப்பு கவுனி அரிசி மாவு - 1 கப்
சர்க்கரை சேர்க்காத கோவா - அரை கப்,
கோதுமை மாவு - 3 ஸ்பூன்
நெய் - அரை கப்
வெல்லம் - 1 கப்,
முந்திரி - ஒரு கைப்பிடி,
உலர் திராட்சை - 20
பாதாம் பருப்பு - 30
பால் - கால் கப்


செய்முறை


கருப்பு கவுனி அரிசியை நன்கு சுத்தம் செய்து, கழுவி, பின் ஒரு சுத்தமான துணியில் பரப்பி உலர விட வேண்டும். நன்கு உலர்ந்ததும் மிக்ஸியில் சேர்த்து மாவாக அரைத்துக் கொள்ள வேண்டும். 


கடாயில் சிறிது நெய் சேர்த்து அதில் முந்திரி, உலர் திராட்சை, உடைத்த பாதாம் ஆகியவற்றைச் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


அதே கடாயில் அரைத்த அரிசி மாவு சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதேபோல கோதுமை மாவையும் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு பாத்திரத்தில் சிறிய டம்ளரில் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதித்ததும் வெல்லத்தைச் சேர்த்து கரைய விட வேண்டும். கரைந்து ஒரு கொதி வந்ததும் வடிகட்டி தனியே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு கடாயில் அரிசி மாவு, கோதுமை மாவு, பால், சர்க்கரை சேர்க்காத கோவா, வெல்லக்கரைசல் ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.


பின்பு அடுப்பை பற்ற வைத்து நன்கு கைவிடாமல் கிளற வேண்டும். இடையிடையே நெய் சேர்த்துக் கிளற வேண்டும். அப்போது தான் அல்வா ஒட்டாமல் வரும்.  வறுத்து வைத்திருக்கும் முந்திரி, பாதாம் ஆகியவற்றை இதனுடன் சேர்த்து கிளற வேண்டும். 


நன்கு அல்வா பதத்துக்கு ஒட்டாமல் சுருண்டு வரும்போது அடுப்பை அணைத்து விட வேண்டும். 


ஒரு டிரேவில் சிறிது நெய் தடவி, அதில் இந்த கலவையை ஊற்றி சிறிது நேரம் ஆறவிட்டு, பின்பு கத்தியால் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி எடுத்துக்கொள்ளலாம். அவ்வளவு தான் சுவையான கறுப்பு கவுணி அரிசி அல்வா தயார். 


மேலும் படிக்க


Diwali 2023: களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்! உயர்ந்த கறி விலை, 12 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் - ஒரு ரவுண்டப்!


Coimbatore: பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமம்; பசுமை வனங்களை உருவாக்கி அசத்தல்!