பாரம்பரிய நெல் வகைகளில் ஒன்றான இது இடையில் மறக்கப்பட்டு இருந்தாலும், சமீப காலங்களாக மக்கள் அதன் பயன்களை அறிந்து அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த அரிசி உண்பதால் உடலுக்கு ஏற்படும் ஐந்து முக்கிய நன்மைகளை பார்க்கலாம்.


கருப்பு அரிசி: 


"தடைசெய்யப்பட்ட அரிசி” எனக் கூறப்படும் கருப்பு நிறத்தில் உள்ள அரிசி, சீன உணவுகளில் பல நூற்றாண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த அரிசியில் செய்யப்பட்ட உணவு வகைகள் வழங்கப்படும் என்ற வழக்கம் சில நாடுகளில் இருந்தது குறிப்பிடத்தக்கது. நம் ஊரில், இந்த அரிசி கருப்புக்கவுணி என்றும் அழைக்கப்படுகிறது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஈ, ஆன்டி ஆக்சிடன்ட், புரதச்சத்து, இரும்புச்சத்து, ஃபைட்டோகெமிக்கல், ஃபைட்டோநியூட்ரியன்ட் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. மற்ற அரிசி வகைகளில் இல்லாத ஊட்டச்சத்துகள் இதில் அதிகமாக உள்ளன. அது மட்டுமின்றி, இந்த அரிசியை உண்பது, புற்றுநோய் ஆபத்தில் இருந்து நம்மை விலக்கி செல்கிறது என்றும் ஆராய்ச்சிகள் கூறுகின்றன.



நார்ச்சத்து நிறைந்தது


இந்த கருப்பு அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது ஒவ்வொரு அரை கப் கவுனி அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த நார்ச்சத்துக்கள் குடல் அசைவுகளை சீராக்க பயன்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது. உணவுகள் செரிக்க பயன்படுகிறது, மேலும் உடல் பருமன், கொழுப்பு ஆகியவை இல்லாமல் பார்த்துக்கொள்கிறது. அதிக எடை இருப்பவர்களுக்கு உடல் எடையை குறைக்கிறது.


தொடர்புடைய செய்திகள்: சதுரங்க வேட்டையை மிஞ்சும் நிஜக்கதை! துபாய் தப்பிச் சென்றாரா ஐஎஃப்எஸ் இயக்குனர்? தீயாய் பரவும் தகவல்!


இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது


கருப்பு அரிசி இதய ஆரோக்கியத்திற்கு உதவுவதாக கூறப்படுகிறது. இது இருதய நோய்களுக்குப் பின்னால் உள்ள பொதுவான காரணமான கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. இதனால், இது நல்ல இதய ஆரோக்கியத்தை பராமரிக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.



நீரிழிவு நோய்க்கு மருந்து


கருப்பு கவுனி அரிசியில் இயற்கையாகவே அதிக அளவில் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் தன்மை கொண்ட ஒரு உணவு பொருளாகும். கருப்பு அரிசி போன்ற முழு தானியங்கள் உட்கொள்வதால் உங்கள் உடலில் டைப் 2 நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது. இதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை உட்கொள்ளலாம்.


கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது


கல்லீரலில் கொழுப்பு சேர்வதால் கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படுகிறது. இந்த கருப்பு அரிசியில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள கழிவுகளை நீக்கி, கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுக்களைப் போக்க உதவுகிறது.


கண்களுக்கு நன்மை


கருப்பு அரிசியில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கரோட்டினாய்டுகள் கண் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். கண் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் சில கண் பிரச்சனைகளைத் தடுக்கிறது. கருப்பு அரிசி, கண்களில் UV கதிர்வீச்சின் தாக்கத்தையும் குறைக்கிறது.