முலாம்பழம்.. இது ஒரு பழமையான பழம். ஆங்கிலத்தில் இதனை சன் மெலன் என்று அழைக்கின்றனர். இந்தியில் இது சர்தா என்று அழைக்கப்படுகிறது. இதனை பழமாக அப்படியேவும் இல்லை சாலட், ஸ்மூத்தி, ப்யூரி, ஐஸ் க்ரீமி, யோகர்ட், ஃப்ரோஸன் டெஸர்ட்ஸ் போன்றும் செய்து சாப்பிடலாம். இது அதிகப்படியான ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் கொண்டதாகும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இதில் ஏராளமான ஊட்டச்சத்துகளும் உள்ளன.


சன் மெலன், கொரியன் மெலன், சமோயி என்றெல்லாம் வெவ்வேறு பெயர்களில் இது அழைக்கப்படுகிறது. இது கோடை காலத்திற்கு உகந்த பழமாகும். இது பபுள் கம், பியர்ஸ் போன்று வாசனை கொண்டிருந்தாலும் கூட வெள்ளரி மற்ற மெலன் வகைகள் போல் ருசி கொண்டிருக்கும்.
 சன் மெலனின் ஊட்டச்சத்துகள் என்னவென்று பார்ப்போமாக. இதில் வைட்டமின் ஏ, சி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், மக்னீஸியம், கார்டனாய்ட்ஸ், அத்துடன் இதில் ஆன்ட்டி இன்ஃபளமேட்டரி குணநலன்கள் அதிகமாக உள்ளது. குகுர்மிடாசின் பி, குகுர்பிடாசின் இ ஆகியன உள்ளன. இவை உடலுக்கு மிகவும் அவசியமான தாதுக்களாகும்.


இதில் வைட்டமின்கள் ஏ, சி, பி 1 மற்றும் பி 2 மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம் மற்றும் கால்சியம் போன்ற தாதுக்களும் உள்ளன. இந்த பழம் கொழுப்பைக் குறைக்க நமக்கு உதவுகிறது. இதில் கோடை காலத்திற்கு தேவையான நீர்ச்சத்தும், சுவையும், அதிக ஊட்டச்சத்துக்களும் உள்ளன. 


இதயத்தைப் பாதுகாக்கும்:
முலாம்பழத்தில் உள்ள அடினோசைன் மற்றும் பொட்டாசியம் இதயத்தை பாதுகாக்கும். பொட்டாசியம் உடலுக்கு சோடியத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும். அடினோசைன் என்பது ரத்தம் உறைதலைத் தடுத்து இதய நாளங்களைப் பாதுகாக்கும்.


மாதவிடாய் வலியை குறைக்கும்
உங்களுக்கு பீரியட்ஸ் பெயின் இருந்தால் முலாம் பழத்தை சாப்பிடலாம். அது மாதவிடாய் கால வயிற்றுவலிக்கு நல்ல நிவாரணியாக இருக்கும்.


முடி உதிர்தலைத் தடுக்கும்
முலாம்பழத்தில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது. இது முடி உதிர்தலைத் தடுத்து முடி வளர உதவுகிறது. இதை சாப்பிடுவதோடு பழக்கூழாக்கி தலையில் நேரடியாக தேய்த்துக் குளிக்கலாம். சர்க்கரை சேர்க்கக் கூடாது.


உடல் எடை குறைப்புக்கு உதவும்:
முலாம்பழம் உடல் எடை குறைப்புக்கு உதவும். இதை உண்ணுவதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிறைவாக இருக்கும். இதனால் உண்ணுதல் குறையும். உடல் எடையும் குறையும்.


கண்களுக்கு நல்லது
முலாம்பழத்தில் பீட்டா கரோடீன் இருப்பதால் அது கண்களைப் பாதுகாக்கும். பீட்டா கரோடீனில் உள்ள வைட்டமின் ஏ கண் பிரச்சனைகளைத் தீர்க்கும்.


ஜீரணத்தை அதிகரிக்கும்:
கடைசியாக முலாம்பழம் ஜீரண மண்டலத்தை வலுப்படுத்தும். இதை உட்கொள்வதால் மலச்சிக்கல் நீங்கும், கேஸ் பிரச்சனை குறையும் கூடவே அசிடிட்டி பிரச்சனையும் நீங்கும்.