இன்றைய காலக்கட்டத்தில் சில மோசமான உணவு பழக்கம் உள்ளிட்டவை நம் குடல் இயக்கத்தை பாதிக்கின்றன. இதனால் வயிறு உப்புசம், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். அபாயம் உள்ளது. நாட்பட்ட மலச்சிக்கல் இன்னும் மோசமானது. இது நம் உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் மன அழுத்தத்திற்கு வழி வகுக்கும் என கூறப்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சனையை சரிசெய்ய சில இயற்கை மூலிகைகள் நமக்கு உதவுகின்றன. குறிப்பாக திரிபலா சூரணம் மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்து என்று கூறப்படுகிறது. கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்று பொருட்களின் கலவைதான் திரிபலா சூரணம். 


திரிபலா பயன்பாடுகள்


திரிபலா உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடல் எடையை குறைக்கப் பயன்படுவதாக கூறப்படுகிறது. மேலும் மலச்சிக்கலை சரி செய்வதிலும் திரிபலா முக்கிய பங்காற்றுவதாக சொல்லப்படுகிறது. ஆயுர்வேதத்தில் திரிபலா ஒரு நல்ல மருந்தாக பார்க்கப்படுகிறது. இந்த திரிபலா சூரணம் செரிமான மண்டலத்தை சீர் செய்யவும், பலப்படுத்துவதற்கும் பயன்படுவதுடன் நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுவதாக கூறப்படுகிறது.  


மலச்சிக்கல் தீர திரிபலாவை எப்படி பயன்படுத்துவது?


1. ஒரு டீஸ்பூன் அல்லது அரை ஸ்பூன் திரிபலா சூரணத்தை எடுத்து அதை வெதுவெதுப்பான சூட்டில் உள்ள சிறிதளவு தண்ணீரில் கலந்து இரவில் தூங்க செல்வதற்கு முன் குடித்துவர வேண்டும்.  இதன் மூலம் மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என கூறப்படுகிறது. 


2. ஒரு சமயம், திரிபலாவில் உள்ள டையூரிக் பண்புகள் உங்கள் தூக்கத்தை பாதித்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் திரிபலா பொடியை இரவு முழுவதும் ஊற வைத்து அதை அதிகாலை 4 முதல் 5 மணி அளவில், வெறும் வயிற்றில் குடிக்கலாம் என கூறப்படுகிறது.


3. திரிபலாவை தண்ணீருடன் சேர்த்து சாப்பிடும் சுவை பிடிக்கவில்லை என்றால் இனிப்பு சுவைக்காக இந்த கலவையுடன் சிறிதளவு தேன் கலந்து உட்கொள்ளலாம் என கூறப்படுகிறது. 


4. மலச்சிக்கலில் இருந்து உடனடி நிவாரணம் பெற திரிபலா பொடியுடன் அரைத்த இஞ்சியை சேர்த்து சாப்பிடலாம் என கூறப்படுகிறது. 


முக்கிய குறிப்பு : உங்கள் மருத்துவரிடம் கலந்து ஆலோசித்த பின்பு, திரிபலா சூரணத்தை உட்கொள்ளலாம். நீங்களாக பயன்படுத்தவேண்டாம்.


மேலும் படிக்க, 


EPS Statement: "திமுகவின் இரட்டை நிலைப்பாடு": என்.எல்.சி விவகாரத்தில் கொந்தளித்த ஈபிஎஸ்..


"நாடாளுமன்ற தேர்தல் தனி மனிதன் வெற்றி இல்லை, நமது வெற்றி இந்தியாவை காப்பாற்றும்" - ஆ.ராசா பேச்சு