நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ ரீதியாக கண்டறியப்படுவதற்கு முன்பே, உங்களுக்கு அறிகுறிகள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 


உலக நீரிழிவு தினம் வரும் நவம்பர் 14ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது. இன்றைய தேதியில் 30களில் உள்ள பலரும் டயாபட்டீஸுக்கு முந்தைய நிலையான ப்ரீ டயாப்பிட்டீஸால்  கணிசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.


சிறுநீர் கழித்தல், எதிர்பாராத எடை இழப்பு, அதிகப்படியான பசி, திடீர் உணர்வின்மை, கால்கள் அல்லது கைகளில் கூச்ச உணர்வு ஆகியவை ப்ரீ டயாபிட்டீஸ் எனப்படும் இதற்கான அறிகுறிகளில் அடங்கும். 


ஆயுர்வேதம்


ஆனால் நம் நாட்டின் பழமையான மருத்துவ முறைகளில் ஒன்றான ஆயுர்வேததத்தின் மூலம் ப்ரீடயாபிட்டீஸ் வராமல் தடுக்கலாம் எனும் கூற்றுகள் முன்வைக்கப்படுகின்றன.


"ஆயுர்வேதத்தின் படி, நீரிழிவு நோய்க்கான முக்கியக் காரணம் 'இஷ்டத்துக்கு சாப்பிடுவது', இது நாம் அனைவரும் அவ்வப்போது செய்யும்  குற்றங்களுள் ஒன்று. ஆயுர்வேத மொழியில், இது அக்னி அல்லது செரிமான நெருப்பால் ஏற்படுகிறது.


இருப்பினும், மற்ற எல்லா நோய்களையும் போலவே, நீரிழிவு நோயையும் வாழ்க்கையில் இரண்டு மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் தடுக்க முடியும்” என்கிறார் கபிவாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் தலைவர் மருத்துவர் க்ருதி சோனி.


 நீரிழிவு நோயாளிகளும் மாரடைப்புக்கு ஆளாகின்றனர். அவர்கள் தங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளாவிட்டால், ஆபத்து இரட்டிப்பாகிறது. இது அவர்களின் அன்றாட வாழ்க்கையிலும் தீங்கு விளைவிக்கும். இந்நிலையில் ப்ரீடயாபிட்டீஸ் நிலையில் ஒருவர் தங்கள் வாழ்வில் சேர்த்துக்கொள்ள வேண்டிய நான்கு பழக்கங்களை பட்டியலிடுகிறார் சோனி. 


இயற்கை சர்க்கரைக்கு மாறவும்


”பெரும்பான்மையான மக்கள் தினசரி பயன்படுத்தும் சர்க்கரை, அதாவது வெள்ளை சர்க்கரையில் ஊட்டச்சத்து மதிப்பு இல்லை மற்றும் கலோரிக்கள் அறவே இல்லை. இதை உங்கள் உணவில் ஒரு அங்கமாக்குவதால் எந்த நன்மையும் இல்லை. எனவே, பழங்கள், வெல்லம் அல்லது தேனில் இருந்து இயற்கையான முறையில் சர்க்கரையை உட்கொள்வதற்கு மாறுவது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது.


மூலிகைகளை வாழ்வின் அங்கம் ஆக்குங்கள்


நீரிழிவு நோயைத் தடுக்க அல்லது கட்டுக்குள் வைத்திருக்க அதிசயங்களைச் செய்யும் பல ஆயுர்வேத மூலிகைகள் உள்ளன. மஞ்சள், நெல்லிக்காய், வெந்தயம் ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


‘நிஷா அமல்கி’(Nisha Amalki) உயர் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த ஆயுர்வேத சூத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இது நெல்லிக்காய் பொடி மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றின் சம பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதனை தினமும் உட்கொண்டால் மிகவும் நன்மை பயக்கும். 


சர்க்கரை நோயாளிகள் மற்றும் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் ஆபத்தில் இருப்பவர்களுக்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் நெல்லிக்காய், ஜாமூன் மற்றும் கரேலா (karela) ஆகியவற்றின் கலவையால் செய்யப்பட்ட பல பழச்சாறுகள் சந்தையில் கிடைக்கின்றன.


உடற்பயிற்சி தான் வழி!


ஒரு நோயைத் தடுக்கும் போது உடற்பயிற்சி செய்வது ஒரு பொருட்டல்ல. உடற்பயிற்சியானது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் ரத்த சர்க்கரை அளவை பேணவும் உதவுகிறது. உடற்பயிற்சியின் எந்த வடிவமும் - அது ஜிம், யோகா அல்லது பிராணயாமா உங்கள் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் கணையத்தின் சீரான செயல்பாட்டை உறுதிப்படுத்தவும் உதவும்.


இரவு உணவு மற்றும் நல்ல தூக்கம்


இது எல்லாவற்றிலும் மிக அடிப்படையானது மற்றும் எளிதானது . இரவு உணவு மற்றும் உண்மையில் அனைத்து உணவுகளுக்கும் இடையில் சரியான இடைவெளி இருக்க வேண்டும். உங்கள் எல்லா உணவுக்கும் இடையில் மூன்று மணிநேர இடைவெளியை வைத்திருக்க பரிந்துரைக்கப்படுகிறது. 
ஆரோக்கியத்தை பராமரிக்க தூக்கம் மற்றொரு முக்கியமான நிகழ்வு. ஒருவர் தினமும் குறைந்தது 7 மணிநேரம் நன்றாக தூங்க வேண்டும். இது நாள்பட்ட வீக்கத்தைக் குறைக்கவும், உடல் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும் உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும்,  ஹார்மோன் பிரச்சினைகளை குணப்படுத்தவும் செய்யும் என நிரூபிக்கப்பட்டுள்ளது.


எனவே, இந்த உலக நீரிழிவு தினத்தில், ப்ரீடியாபயாட்டீஸூக்கு குட்பை சொல்வதாக உறுதியளியுங்கள். இந்த எளிய ஆனால் சீரான பழக்கங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்” எனக் கூறுகிறார் மருத்துவர் சோனி.