வாழ்கை முறை மாறிவிட்டதாலும், வேகமான உலகிற்கு ஈடு கொடுத்து ஓட வேண்டியதாலும், உணவுப் பழக்கவழக்கங்களில் ஏற்படும் மாற்றங்களாலும், பலர் வயிறு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அஜீரணம், நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பொதுவான பிரச்சனைகள் காரமான, துரித உணவுகளை உட்கொள்வதால் அதிகமாகிவிட்டன.


இதனால், சிலருக்கு காலை வேளையில் குடல் சீராக இயங்காமல் போகும் பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களாக இருந்தால், வயிற்றை சுத்தப்படுத்த உதவும் பல வீட்டு வைத்தியங்கள் உள்ளன, அவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.


ஓமத்தண்ணீர்


ஓமம் கலந்த தண்ணீர் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இது வாயு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. அதனை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வதால் வயிற்றில் வீக்கம் ஏற்படுவது குறைகிறது. மேலும் காலையில் குடல் சீராக இயங்க உதவுகிறது.



சீரகத் தண்ணீர்


சீரகத் தண்ணீர் நம் வயிற்றுக்கு மிகவும் நன்மை பயக்கும், இது செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது, வாயு மற்றும் வீக்கம் பிரச்சனையை நீக்குகிறது மற்றும் சீரான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.


தொடர்புடைய செய்திகள்: Whatsapp Edit Message: மெசேஜ் தப்பாயிடுச்சா? அடுத்த 15 நிமிடங்களுக்குள்...புதிய அப்டேட்டை அறிவித்த மார்க் சக்கர்பெர்க்!


தேன் கலந்த எலுமிச்சை நீர்


தினமும் காலையில் தேனுடன் கலந்த எலுமிச்சை நீரைக் குடிப்பதால், மலச்சிக்கல், செரிமானக் கோளாறு மற்றும் அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகள் குணமாகும். இது செரிமான அமைப்பை பலப்படுத்துவதுடன், வயிற்றை சுத்திகரித்து ஒட்டுமொத்த செரிமானத்தை பராமரிக்க உதவுகிறது.



நார்ச்சத்து நிறைந்த உணவுகள்


நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமானத்திற்கு சிறந்ததாகக் கருதப்படுகிறது. கேரட், ஓட்ஸ், பட்டாணி, பருப்பு, பீன்ஸ், ஆப்பிள், ஸ்ட்ராபெர்ரி போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். இது செரிமானத்தை பலப்படுத்துவதுடன், சீரான குடல் இயக்கத்திற்கு வழிவகுக்கிறது.


கற்றாழை சாறு


இந்த இயற்கை சாறு மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட பெரிய அளவில் உதவும். இந்த பிரச்சனையை அடிக்கடி எதிர்கொள்ளும் நபர்கள் தங்கள் உணவில் கற்றாழை சாற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். சிறிய அளவில் தொடங்கி, படிப்படியாக அதிகரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.