Stomach Pain Home Remedies: அஜீரணக் கோளாறு காரணமாக வயிற்று வலி ஏற்படுவது இயல்புதான். ஆனால் எல்லாவற்றிற்கும் மாத்திரை, மருந்து என்றே இருக்க முடியாது அல்லவா? சில நேரங்களில் நாம் கைவைத்தியம் செய்து கொள்வதும் நலம்தான். அப்படியாக வயிற்று வலிக்கு சிறந்த கை வைத்தியம் சிலவற்றை உங்களுக்குப் பரிந்துரைக்கிறார்கள் நிபுணர்கள்.


லெமன் டீ:
டாக்டர் நிகிதா டோஷி, வயிற்று வலிக்கு லெமன் டீ பரிந்துரைக்கிறார். இது வயிறு உப்புசம் மற்றும் வயிற்றுக் கடுப்புக்கு நல்ல மருந்து என்று அவர் பரிந்துரைக்கிறார். எலுமிச்சை 3 அல்லது 4 துண்டுகள், துளசி இலை, 1 டேபிள்ஸ்பூன் ஓமம், இவற்றுடன் 3 கப் தண்ணீர் இருந்தால் போது லெமன் டீ ரெடி. 






ஜிஞ்சர் டீ:


இஞ்சி மிகச் சிறந்த வலி நிவாரணி. இரண்டு கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் ஒரு இன்ச் இஞ்சி எடுத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் தேன், மிளகு சேர்த்து கொதிக்கவிடவும். இஞ்சி டீ தயார். வயிறு உப்புசத்தை அது சரி செய்யும். குமட்டலை நீக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். கர்ப்பிணிப் பெண்கள் சிலருக்கு வாந்தி அதிகமாக இருக்கும். அவர்கள் இந்த இஞ்சி தேநீரைப் பருகிவருவது நல்லது.






தாளித்த மோர்
மோர் வயிற்று உபாதைகள் அனைத்திற்குமே நல்ல தீர்வு தரக்கூடியது. ஒரு கப் ஃப்ரெஷ் தயிர் எடுத்துக் கொள்ளவும். அதில் கொஞ்சம் சீரகம், ப்ளாக் சால்ட் சேர்த்துக் கொள்ளவும். ஒரு ப்ளெண்டரில் நன்றாக ப்ளெண்ட் செய்து பரிமாறவும். ஜீரணக் கோளாறுகள் பறந்துபோகும். மேலும் இது குடல் நலத்தைப் பேண உதவும்.


சோம்பு தேநீர்
அரேபியன் ஜர்னல் ஆஃப் கெமிஸ்ட்ரி பத்திரிகையில் சோம்பின் பண்புகள் பற்றி வெகு சிறப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. சோம்பில் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. மேலும் வயிறு கோளாறுகளை நீக்கும் பண்பும் உள்ளது. சோம்பில் உள்ள நார்ச்சத்தானது மலச்சிக்கலை நீக்க உதவும். ஒரு கோப்பை தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். அதை நன்றாக கொதிக்க வைத்து அதில் ஒரு டீஸ்பூன் சோம்பு, துளசி இலைகள் சிறிதளவு சேர்க்கவும். பின்னர் அதனைப் பருகலாம்.






இவை எல்லாம் செய்த பின்னரும் வயிற்று உபாதை நீடித்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.