நீங்கள் ஃபுட்டியாக இருந்து மும்பையில் இருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் தவறவிடக் கூடாத ஐந்து உணவகங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம். மும்பையிலேயே வசிப்பவர்களுக்கு இது புதிதல்ல. ஆனால் புதிதாக மும்பைக்கு வந்தவர்களுக்கு இது நிச்சயம் நல்ல டிப்ஸ்.
கஃபே மாண்டேகர்:
உங்களுக்கு கலையும், உணவும் மிகவும் பிடித்த விஷயங்கள் என்றால் நீங்கள் கஃபே மாண்டேகர் உணவகத்திற்கு நிச்சயம் செல்ல வேண்டும். மும்பையின் மிகவும் ரிச்சான ஏரியா என்று அறியப்படும் இடங்களில் ஒன்று கொலாபா. இந்த கஃபே மாண்டேகர் கொலாபாவில் தான் உள்ளது. இங்கு உள்ளரங்கு கலை வேலைகளை புகழ்பெற்ற இந்திய கார்டூனிஸ்ட் மரியோ மிராண்டா செய்துள்ளார். அது அங்குள்ள சூழலை ரம்மியமாக்கியிருக்கும். கூடவே சுவையான சிக்கன் பர்கரும், பாஸ்தாவும் கிடைக்கும்.
யாஸ்தானி பேக்கரி:
உங்கள் நண்பர்களுடன் பொழுதுபோக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இந்த அழகான பேக்கரிக்கு செல்லுங்கள். இதை ஈரான் நாட்டைச் சேர்ந்த ஜெண்ட் மெஹர்வான் ஜெண்ட் என்ற அடுமனைக்காரர் தோற்றுவித்தார்.
லியோபோல்ட் கஃபே:
சிக்கன் டிக்கா, பெர்ரி புலாவ், சில்லி சீஸ் டோஸ், அரபியாட்டா ப்ரான்ஸ். இவையெல்லாம் சாப்பிட வேண்டுமென்றால் மும்பை லீயோபோல்ட் கஃபேவுக்கு செல்ல வேண்டும். இது நகரின் மிகவும் பழமையான உணவகங்களில் ஒன்று. உள் அலங்காரமும் சுவையான உணவும் தான் இந்த உணவகத்தின் ஸ்பெஷாலிட்டி. இது தெற்கு மும்பையில் உள்ளது. இந்த உணவகம் மும்பை தீவிரவாத தாக்குதலில் ஒரு இலக்காக இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.
கஃபே மெட்ராஸ்:
இது மும்பையில் உள்ள தலைசிறந்த தென் இந்திய காலை சிற்றுண்டி உணவகம். இது மாதுங்கா சாலையில் அமைந்துள்ளது. இங்கு ரொம்ப ஃபேமஸ் என்றால் அது ரச வடை தான். அதுதவிர தோசை, இட்லியும் கிடைக்கும்.
கியானி அண்ட் கோ:
100 ஆண்டுகளுக்கும் மேலாக இரானிய காஃபி கடையான கியானி அண்ட் கோ. இங்கு கிடைக்கும் காலை சிற்றுண்டியின் சுவையை அடித்துக் கொள்ள முடியாது என்பதே பரவலான கருத்தாக உள்ளது. இரானி சாய், கேரமல் கஸ்டர்ட் ஆகியன இவர்களின் ஸ்பெஷாலிட்டி