சமீபத்தில் சாக்லேட்டால் முழுவதுமாக நிரப்பப்பட்ட இதய வடிவத்திலான சாண்ட்விச் செய்யப்படும் வைரல் வீடியோ ஒன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவின் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. குஜராத்தின் பாவ்நகர் பகுதியில் சாலையோரக் கடை வியாபாரி ஒருவர் எடுத்த வீடியோ அது எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த சாண்ட்விச் தயாரிப்பைக் காட்டியுள்ள வீடியோவைப் பகிர்ந்துள்ள ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, `இந்த சாண்ட்விச் என்னை அசர வைத்துவிட்டது.. இப்படியான காம்பினேஷனை யார் கண்டுபிடித்தார்கள்? இவற்றை மக்கள் எங்கே வாங்குவார்கள் என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள்?’ என விளையாட்டாக கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் குஜராத்தி உணவு மீதான தனது ஈர்ப்பையும் பதிவு செய்துள்ளார். `எனக்கு குஜராத்தி உணவு பிடிக்கும்.. ஆனால் இந்த கண்டுபிடிப்பு உணவு என்பது எனது எல்லைக்கு அப்பாற்பட்டது’ என ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் ஒரு பிரட் ஸ்லைஸை ஒருவர் இதய வடிவில் வெட்டுகிறார். அதன் மீது பட்டர், ஜாம் முதலானவற்றைத் தடவுகிறார். அடுத்ததாக, சாக்லேட் பார்கள் பொடிகளாகத் தூவப்படுவதாகக் காட்டப்படுகிறது. மேலும், அதிகமாக சீஸ் சேர்க்கப்படுகிறது. இதுவரை நம்மை ஆச்சர்யப்படுத்திய பிறகு, அடுத்ததாக கூடுதல் ஆச்சரியத்தை வழங்குகிறார்கள்.. இந்த சாண்ட்விச்சில் அடுத்ததாக சாக்கோபார் ஐஸ்க்ரீம் இரண்டு லேயர்கள் போடப்படுகிறது.. இறுதியாக இந்த வீடியோவில், `பாவ்நகரில் இருந்து தில்வாலா சாண்ட்விச்’ என்ற சொற்கள் காட்டப்படுகின்றன.
சமூக வலைத்தளங்களில் பலரும் இந்த உணவுக் கண்டுபிடிப்பை விரும்பவில்லை என்பதைக் கமெண்ட்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும், ட்விட்டர் தளத்தில் இந்த வீடியோவை சுமார் 4.8 லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்